“யானும் ஏத்தி ஏழுலகும் முற்றும் ஏத்தி…”

0
810 views

testing

யானும் ஏத்தி ஏழுலகும் முற்றும் ஏத்தி, பின்னையும்
தானும் ஏத்தி லும்தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும்,
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்ப,
யானு மெம்பி ரானையே ஏத்தி னேன்யா னுய்வானே.

மூன்றாந் திருமொழி

விளக்க உரை:

***- ஒருவராலும் எல்லைகாண வொண்ணாதபடி அளவிறந்த பெருமையையுடைய பெருமானை நான் ஸத்தை பெறுவதற்காக ஏத்தினேனத்தனை யென்கிறார். யானுமேத்தி என்ற விடத்துள்ள உம்மையை உயர்வுசிறப்பும் மையமாகக் கொள்ளலாம்; “மயர்வற மதிநலமருளினன்” என்ற முதலடியிலேயே சொல்லும்படி அருள்பெற்ற நானும் என்றபடி. ஏழுலகும் முற்றும்-பேரறிவுடையார் சிற்றறிவுடையார் என்கிற வாசியில்லாம் எல்லாரும் ஏத்துவது. பின்னையும் தானுமேத்திலும்ஸ்ரீஸர்வஜ்ஞனென்றும் ஸர்வசக்தனென்றும் பேர் பெற்றிருக்கின்ற எம்பெருமான் தானும் ஏத்துவது. இங்ஙனே எல்லாருங்கூடி யேத்தினாலும் முடிவுகாண்பதென்பதுண்டோ?

இங்கே ஈடு; -மயர்வற மதிநல மருளப்பெற்ற தாமுமேத்துவது: விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு வாசியறச் சிறியார் பெரியார் என்னாதே ஸர்வரும் எத்துவது; ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனாய், தொடங்கின காரியம் செய்து தலைக்கட்டுகைக் கீடான ஸர்வசக்தியுக்தனான தானும் ஏத்துவது; இப்படியெல்லாரும் ஓருமிடறாயேத்தினாலும், பின்னையும் ஏத்தினவிடம் அளவுபட்டு ஏத்தாதவிடம் விஞ்சியாயிற்றிருப்பது விஷயம். அந்யபரரோடு அநந்யபரரோடு அளவுடையாரோடு அளவிலிகளோடு வாசியல்லை விஷயத்தை எல்லைகாண வொண்ணாமைக்கு.

இப்படியறிந்து வைத்தும் ஏத்துகையிலே நீர் பிரவர்த்தித்தது ஏன்? என்ன, விஷயம் பரமரஸ்யமாக இருப்பதனாலும், இதிலே கைவைக்கும்படி அவன் பண்ணின மஹோபகாரத்தைச் சிந்தை செய்ததனாலும் ஏத்தப்புகுந்தே னென்கிறார் பின்னடிகளினால். ஏத்தாதிருக்கில் பிழைத்திருக்க மாட்டாமையாலும் ஏத்தினேனென்கிறார் யான் உய்வான் என்பதனால்.

Meaning:

Even if I sing his praise, and all the seven worlds join, and the Lord himself began to sing too, would we come to an end? Lord, sweet like milk honey, sugar and ambrosia! I only sang that I may rejoice.

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here