On, 10 January 2015 ; Jaya Varusha Margazhi Pooram, Is the day 10 of Irappathu utsavam of Thiruadhyayana Utsavam at Sri Bhaktavatsala Perumal Temple, Thirukkannamangai. In the morning around 11.30 a.m vishesha Thirumanjanam was performed for Perumal In the evening around 7.30 p.m Sri Bhakthavatsala Perumal purappadu to paramapada vaasal and goes to 3rd prakaram ( Senbaga prakaram) and asthanam at mandapam. There thiruvaimozhi Sevakalam took place followed by Satrumurai . Later Swami Nammazhwar Thiruvadi Thozhal ( Nammazhwar Moksham) was portrayed and Azhwar , Acharyas Maryathai was done and they returns to their sannadhis.Later around 11 p.m Sri Bhaktavatsala Perumal purappadu in ul prakaram and comes via paramapada vaasal and the gates closed and returns to moolasthanam . Several bagavathas took part in the Nammazhwar Thiruvadi Thozhal day 10 of Irrappathu utsavam and got the blessings of Divya Dampathis.
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ பஞ்ச க்ருஷ்ண க்ஷேத்ரங்களில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் இன்று ஸ்ரீ ஜய வருஷம் மார்கழி மாதம் 26ந் தேதி 10.01.2015 சனிக்கிழமை இராப்பத்து உத்ஸவ சாற்றுமுறை தினத்தை முன்னிட்டு காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடாகி உள் ப்ரகாரத்தில் வலம் வந்து பரமபத வாசலில் நுழைந்து மூன்றாம் ப்ரகாரமான “ செண்பகப்ரகாரத்தில் “ வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருளி திருவாய்மொழி சேவாகாலம், சாற்றுமுறை முடிந்து, “ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி தொழல்” நிகழ்ச்சி நடைபெற்று, ஆழ்வார்கள் மரியாதை ஆகி ஆழ்வாராதிகளை ஆஸ்தானத்துக்கு எழுந்தருள செய்து, பின் இரவு 11 மணிக்கு மண்டபதிலிருந்து புறப்பாடாகி உள் ப்ரகாரத்தில் மறுபடியும் எழுந்தருளி ப்ரமபத வாசலுக்கு எழுந்தருளி “பரமபத வாசலை” மூடி, ஆஸ்தானத்துக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து இன்புற்று, ஸ்ரீ ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்
The following are some of the photos taken during the occasion…
Photography : Sri Dr Rajagopalan TSR