எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை*
வாசவார் குழலாள் மலைமங்கை தன்-
பங்கனை* பங்கில் வைத்து உகந்தான் தன்னை*
பான்மையைப் பனிமா மதியம் தவழ்*
மங்குலைச் சுடரை வடமாமலை-
உச்சியை* நச்சி நாம் வணங்கப்படும்-
கங்குலை* பகலைச் சென்று நாடிக்*
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரமான திருக்கண்ணமங்கையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு நடந்து வரும் சித்திரை ப்ரும்மோத்ஸவத்தில், இன்று சித்திரை மாதம் 14 ந் தேதி 27.04.2015 திங்கட்கிழமை காலை வழக்கம்போல் விஸ்வரூபம், திருவனந்தல், காலசந்தி பூஜைகள் முடிந்து, வீதியில் “ செல்வர் “ ஏளி பலி சாதித்து அதன் பின் “ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஸ்ரீ ஆண்டாளுடன்” திருப்பல்லக்கில் 2 வது நாளாக 2 கி.மீ தொலைவில் உள்ள “ அம்மையப்பன் “ கிராமத்திற்கு எழுந்தருளி, அங்குள்ள நேற்று விட்டுப்போன பாக்கி வீதிகளில் மண்டப்ப்படி ஆகி அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலுக்கு எழுந்தருளி ஸேவை சாதித்து, பின் திருமஞ்சனம் கண்டருளி மாலை 7 மணிக்கு திருக்கண்ணமங்கை எழுந்தருளினார்.
அதன் பின் இரவு 10.30 மணிக்கு “ சேஷ வாகனத்தில் “ திருவீதியுலா கண்டருளி சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் சேவித்து இன்புற்று எல்லாம் வல்ல ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப்பெற்றனர்.
For previous utsavams at this temple, please visit: http://anudinam.org/?s=Thirukannamangai
The following are some of the photos taken during the occasion.
Courtesy:Sri Rajagopalan Tsr