ஸ்ரீரங்கம் கோயிலில் 43 உபசன்னதிகள், 11 கோபுரங்கள் சம்ப்ரோக்ஷணம் 9, செப்டம்பர் 2015; அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது, 7th செப்டம்பர் 15 – 8 pm முதலில் யாகசாலை பூஜை தொடங்குவதற்காக தாயார் சன்னதி வில்வ மரத்தின் அருகில் பாலிகை மண் எடுக்கும் வைபவம் நடைபெற்று, யாகம் தொடங்கபெற்றது. நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் யாகசாலைக்கு எதிரில் உள்ள நாலு கால் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாளித்தார்.
Srirangam Ranganathaswami Temple Mahasamprokshanam For 11 Gopurams And 43 Upasannadhis : Part 3
8th செப்டம்பர் ; 8 am வடக்கு கோபுரம் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றிலிருந்து சம்ப்ரோக்ஷனத்திற்காக புனித நீர் வெள்ளி குடத்தில் நிரப்பப்பட்டு, ஆண்டாள் யானை மேல் வைத்து புறப்பாடு கண்டருளி உத்திரவீதி வழியாக மேள தாளத்துடன், இரு புறமும் வேத, பிரபந்த கோஷ்டி பாராயணத்துடன் ஊர்வலம் வந்து வெள்ளை கோபுரம் வழியாக ஆயிரம்கால் மண்டபம் யாகசாலைக்கு எழுந்தருளப்பட்டது.யாகசாலை பகுதியில் வேத, பிரபந்த கோஷ்டிகள் பாராயணத்துடன் யாகம் தொடங்கபெற்று ஏராளமான சேவார்த்திகள் முன்னிலையில் பூர்ணாஹுதி வெகுசிறப்பாக நடைபெற்றது.
9th செப்டம்பர் ; அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜையுடன் யாகம் தொடங்கபெற்று அணைத்து கலசங்களும் அந்தந்த சன்னதிகளுக்கு புறப்பாடு கண்டருளி அணைத்து சன்னதி விமானங்களுக்கும் ஒருசேர சம்ப் ரோக்ஷணம் நடைபெற்றது. அதன்பின்னர் 11 கோபுரங்களுக்கும் சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான சேவார்த்திகள் கண் குளிர கண்டு சேவிக்கும் பாக்கியம் பெற்றனர்.
These are some of the photos taken during the occasion….