On September 24, 2015, 748th Thirunakshathra Mahothsavam of Swami Desikan took place at Thirukkannamangai Divya Desam, Day 10 utsavam was celebrated well . Vishesha Visthaara thirumanjanam was performed for Swami Desikan and Sri Hayagrivar in the morning. The water was taken from Kaveri which is 2 Km away from the temple. 54 Different Variety Prasadams are made Amuthupadi for Perumal on Swami Desikan Thirunakshatram. Veda parayanam and with Nalayira Divya Prabhanda parayanam took place in a very magnificent manner. Lot of Bhaagavathaas took part in Swami Nigamantha Mahadesikan Thirunakshatram at Thirukkannamangai.
மன்மத வருஷம் புரட்டாசி 7ந் தேதி திருவோண நன்நாளில் காலை 7 மணி சுமாருக்கு 2 மைல் தொலைவில் உள்ள காவிரியின் கிளை நதியான “வெட்டாற்றில்” இருந்து புனித நீர் யானை மீதும் மற்றும் சுமார் 33 கடங்களில், 33 ஸ்வாமிகளால் எடுத்து குடை தீவட்டி, மேள வாத்ய கோஷ்டியுடன் திருவீதி முழுவதும் வலம் வந்து சந்நிதி முன் எழுந்தருளப் பண்ணி ஸ்தபனம் செய்யப்பட்டது.
ஸ்வாமிகளுக்கு சிறிது நேர ஓய்வுக்குப் பின் ததியாராதனை 10 மணிக்கு முடிந்து, சுமார் 11 மணிக்கு ஸ்ரீ ஹயக்ரீவன், ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகனுக்கு வெளி மண்டபத்தில் விஸ்தார திருமஞ்சனம் மதியம் 1.30 வரை விசேஷமாக நடந்தது. ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேகவல்லி தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெற்றது. உடன் ஸ்ரீ ஹயக்ரீவரை சந்நிதி உள் எழுந்தருளப் பண்ணிவிட்டு, ஸ்ரீ தேசிகனுக்கு “கங்கையினும் புனிதமான தர்ஸ புஷ்கரிணி”யில் அபவிருதம்(தீர்த்தவாரி) ஆகி, உடனே விசேஷ அலங்காரம் செய்விக்கப்பட்டு ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சந்நிதிகளுக்கு புறப்பாடு ஆகி,யானை முன் செல்ல,ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சந்நிதிகளில் மங்களா சாசனம் ஆனது. பின் ஸ்ரீ ஹயக்ரீவர் மங்களாசாசனம் நடந்தது. அதன் பின் சுமார் 6.30 மணியளவில் திருப்பாவை சாற்றுமுறை நடந்தது.
These are some of the photos taken during the occasion…
Writeup & Photography : Sri Dr Rajagopalan TSR