மன்மத வருஷம் புரட்டாசி 7ந் தேதி வியாழக்கிழமை திருவோண நன்நாளில் காலை 7 மணி சுமாருக்கு 2 மைல் தொலைவில் உள்ள காவிரியின் கிளை நதியான “வெட்டாற்றில்” இருந்து புனித நீர் யானை மீதும் மற்றும் சுமார் 33 கடங்களில், 33 ஸ்வாமிகளால் எடுத்து குடை தீவட்டி, மேள வாத்ய கோஷ்டியுடன் திருவீதி முழுவதும் வலம் வந்து சந்நிதி முன் எழுந்தருளப் பண்ணி ஸ்தபனம் செய்யப்பட்டது.
ஸ்வாமிகளுக்கு சிறிது நேர ஓய்வுக்குப் பின் ததியாராதனை 10 மணிக்கு முடிந்து, சுமார் 11 மணிக்கு ஸ்ரீ ஹயக்ரீவன், ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகனுக்கு வெளி மண்டபத்தில் விஸ்தார திருமஞ்சனம் மதியம் 1.30 வரை விசேஷமாக நடந்தது. ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேகவல்லி தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெற்றது. உடன் ஸ்ரீ ஹயக்ரீவரை சந்நிதி உள் எழுந்தருளப் பண்ணிவிட்டு, ஸ்ரீ தேசிகனுக்கு “கங்கையினும் புனிதமான தர்ஸ புஷ்கரிணி”யில் அபவிருதம்(தீர்த்தவாரி) ஆகி, உடனே விசேஷ அலங்காரம் செய்விக்கப்பட்டு ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சந்நிதிகளுக்கு புறப்பாடு ஆகி, யானை முன் செல்ல, ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சந்நிதிகளில் மங்களா சாசனம் ஆனது.
பின் ஸ்ரீ ஹயக்ரீவர் மங்களாசாசனம் நடந்தது. அதன் பின் சுமார் 6.30 மணியளவில் திருப்பாவை சாற்றுமுறை நடந்தது.
இரவு 10 மணிக்கு ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் விசேஷ புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீ தேசிகன் ஸந்நிதிக்கு எழுந்தருளுவதற்கான புறப்பாடு ஆனது. விசேஷ ப்ரம்மாண்ட வெடி, வாண வேடிக்கை, விசேஷ நாதஸ்வரக் கச்சேரியுடன் உள் ப்ரகாரத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலன் எழுந்தருளி ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி அருகில் எழுந்தருளியவுடன், ஸ்ரீ தேசிகன் வேத கோஷத்துடன், பஞ்சாயி சொல்லி பூர்ண கும்பம் சமர்ப்பிக்கப்பட்டு, பட்டு, பரிவட்டம், மாலை இத்யாதிகளுடன் எதிர்கொண்டழைத்து பெருமாள் ஸ்ரீ தேசிகன் சந்நிதியை நோக்கி திரும்பி ஏளியவுடன், பட்டு பரிவட்டங்கள் சாற்றி ஆரத்தி ஆனதும், தஸாவதார ஸ்லோகம் 13ம் ஒவ்வொரு ஸ்லோகமாக சேவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒவ்வொரு தளிகை, அதாவது சுமார் 25 KG சுக்கு ஏலம் கலந்த நாட்டுச் சர்க்கரை, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாராபருப்பு, முந்திரி, உலர் திராக்ஷை, பேரீச்சை, டைமன் கல்கண்டு, குண்டு சீனா கல்கண்டு, குழவு ஜீனி, தேங்காய் பூ, கொப்பரை தேங்காய் பல், அக்ரூட் பருப்பு, அத்திப் பழம், dirty fruity, முதலிய பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக நைவேத்யம், கற்பூரம், காளாஞ்சி செய்விக்கப்பட்டு, பின் அனைத்து த்ரவியங்களையும் ஒன்றாக கலந்து சேவிக்க வந்திருக்கும் அனைத்து சேவார்த்திகளுக்கும் சந்தனம், காளாஞ்சியுடன் இந்த ப்ரசாதம் விநியோகிக்கப்பட்டது.
ப்ரசாத வினியோகம் ஆனதும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஸ்ரீ தேசிகன் சந்நிதிக்குள் எழுந்தருளினார்.
மறு அலங்காரம் ஆகி, நவநீதம் தளிகை சமர்ப்பிக்கப் பட்டு திரை திறந்து, பின் நித்யானுசந்தான திருவாராதனம் கோஷ்டி நடைபெற்றது. அதன் பின் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஸ்ரீ தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளியபின் பெருமாள் முன் சேவிப்பதற்காக 4000 ல் நிறுத்தி வைக்கப்பட்ட 400 பாசுரங்கள் சேவிப்பதற்கு தொடக்கம் ஆகி 400 பாசுரங்கள் சேவிக்கப்பட்டது. மறுநாள் 25.09.2015 காலை 9 மணியளவில் மடப்பள்ளியிலிருந்து ஜீரா முதலிய தளிகைகளுடன் 54 வகை பக்ஷணங்கள் குடை தீவட்டி இத்யாதி மர்யாதைகளுடன் உள் ப்ரகாரத்தில் ப்ரதக்ஷணமாக எடுத்து வரப்பட்டு ஸ்ரீ தேசிகன் சந்நிதியில் உள்ள ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை சமர்ப்பிக்கப்பட்டு அனைத்து தளிகைகளும் கண்டருளப் பட்டு பெரிய சாற்றுமுறை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. அதன் பின் பெருமாள், ஆழ்வார்கள், ஆச்சார்யன், ஆஸ்ரம, ஸ்ரீ மடத்து ஸம்பாவனைகள் மற்றும் கோஷ்டி வேத பாராயண, அத்யாபக ஸ்வாமிகள் சம்பாவனைகள் ஆனதும் தீர்த்த கோஷ்டி ஆனது. அனைத்து ப்ரசாதங்களும் வந்திருந்த 100க்கணக்கான ஸேவார்த்திகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டது.
அதன் பின் சந்நிதி மர்யாதை ஆகி சுமார் மதியம் 1.30 மணியளவில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் பனி முக்காட்டு சேவையுடன் ஆஸ்தானத்து எழுந்தருளினார். ஸ்ரீ தேசிகன் விடையாற்றி புறப்பாடு நடந்தது. இரவு 8 மணிக்கு விடையாற்றி உத்ஸவத்துடன் ஆச்சார்யனின் 748 வது திருநக்ஷத்ர மஹோத்ஸவம் இனிதே முடிவடைந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து சேவித்து ஆச்சார்யன் மற்றும் ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.
These are some of the photos taken during the occasion…
Thiruppavadai and Bhakshanam Samarpithal for Perumal and Swami Desikan
Sri Bhakthavatsala Perumal Pani Mukkadu Purappadu
Photography : Sri Dr Rajagopalan TSR
The photos and more so the detailed write-up transported us to Tirukannamangai and made us enjoy swami Desikan’s Tirunakshatra utsavam. Hats off to the devotees and participants.
THANK YOU VERY MUCH FOR YOUR KIND HEARTFELT COMMENT.