24th செப் 15 – அதிகாலை 4 மணிக்கு திருவந்திபுரம் ஸ்வாமி தேசிகன் இரத்தின அங்கி சேவையுடன், கண்ணாடி அறையில் எழுந்தருளியதும், வேத, பிரபந்த கோஷ்டி சாத்துமுறை ஆகிற்று.
Thiruvahindrapuram Swami Desikan Manmadha Varusha Thirunakshatra Utsavam: Day 10 Mangalasasanam
Date:
Share post:
மூலவர் சன்னதியிலிருந்து ஸ்ரீ ஹயக்ரீவர் சிறியபல்லகில் எழுந்தருளி ஸ்வாமி தேசிகனுடன் மலை மேல் புறப்பாடு கண்டருளினார். நூதன பெரிய குடைகள், நாதஸ்வர கச்சேரி, திரளான கோஷ்டிகளுடன் ஸ்வாமி தேசிகன் கம்பீரமாக மலைமேல் எழுந்தருளினார்.மலைமேல் ஸ்வாமி தேசிகன் எழுந்தருளியதும் பூர்ண கும்ப மரியாதை சமர்ப்பிக்கபட்டது.
மலைமேல் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருடைய மரியாதை ஆனவுடன் கோஷ்டி சாத்துமுறை நடைபெற்றது. ஏராளமான பழவகைகள் லட்டு முதலான நைவேத்தியங்கள், ஸ்ரீ ஹயக்ரீவனுக்கும், ஸ்வாமி தேசிகனுக்கும் சமர்பிக்கபட்டு, அனைத்து சேவர்த்திகளுக்கும் விநியோகிக்கபட்டது.
பின்னர் ஸ்வாமி தேசிகன் எழுந்தருள்வதற்காக, படி களில் இரத்தின கம்பளம் விரிக்கப்பட்டு, நாதஸ்வர கச்சேரியுடன் ,கோஷ்டி ஸ்வாமிகள், ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொரு கட்டியம் வாசித்தபடி 72 கட்டியம் கூறி ஸ்வாமி தேசிகனை கீழ் கோயிலிற்கு சகல உபசாரங்களுடன் வரவேற்று படி உற்சவம் கண்டருளபட்டது.ஸ்வாமி தேசிகன் முதலில் ஸ்ரீ தேவநாயக பெருமாள் சன்னதியில் மங்களாசாசனம் கண்டருளினார், பின்னர் தாயார் சன்னதியில் மங்களாசாசனம் ஆகிற்று. அடுத்தடுத்து அனைத்து உபசன்னதிகளிலும் பகல் முழுவதும் மங்களாசாசனம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ஸ்வாமி தேசிகன் பல்லகில் வீதி புறப்பாடு கண்டருளினார்.
These are some of the photos taken during the occasion….