ஸகஸ்ரகலசாபிஷேகம் எல்லா அபிஷேகங்களைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தது. எம்பெருமானுக்கு ஒரு கலச அபிஷேகத்திலிருந்து பல வித அபிஷேகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதில் ஸகஸ்ரகலசாபிஷேகம் மிகவும் உயர்ந்தது.
கோயிலில் ஏதாவது தோஷங்கள் ஏற்பட்டால் அந்த தோஷங்களுக்கு தக்கவாறு ஒவ்வொரு அபிஷேகம் சொல்ல்ப்பட்டது. ஆனால் ஸகஸ்ரகலசாபிஷேகத்தினால் ஸர்வ பாபமும் நீங்கும். ஸர்வ தோஷ ப்ராயச்சித்தம் என்பது இந்த ஒரு அபிஷேகத்திற்குத்தான். மேலும் இதில் அனேக விதமான மருந்து சாமான்களை அபிஷேக தீர்த்தத்தில் சேர்த்து பகவானுக்கு அபிஷேகம் பண்ணுகிரோம். இந்த மருந்துகளெ நம்முடைய தோஷத்தினை நீக்கும். கூட எம்பெருமானின் திருமேனி ஸம்மந்தமும் ஏற்படுவதால் கேட்கவும் வேணுமா?
மற்றும் இங்கு ஒரு விசேஷம். வைத்யராஜனான ஸ்ரீ ஒப்பிலியப்பனும் சேர்ந்திருக்கிறான். மேலும் இந்த கலஸங்களில் படிப்பிற்கு ஸம்பந்தப்பட்ட பகவான், ஆரோக்யத்திற்கு ஸம்பந்தப்பட்டவர், வ்யாதியைப் போக்குபவர் – இம்மாதிரி ஜீவராசிகளுக்கு உபயோகப்படக்கூடிய எம்பெருமான்களை ஆவாஹனம் பண்ணி பூஜிக்கப்படுகிறது. இவ்வளவு விசேஷம் இதில் உள்ளன. ஆகையால் எல்லோரும் இந்த பெரிய கைங்கர்யத்தில் ஈடுபட்டு எம்பெருமானை ஸேவித்து எம்பெருமான் ப்ரஸாதத்தைப் பெற்று உஜ்ஜீவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
நம்முடைய ஸ்ரீ ஒப்பிலியப்பன் பட்டாபிஷேக ராமர் ஸகஸ்ரகலசாபிஷேகம் வரும் தை மாதம் 16-17 (ஜனவரி 30, 31 – 2016) தேதிகளில் பண்ணுவதற்கு ஸ்ரீ ஸ்வாமி திருவுள்ளம். இந்த மாபெரும் கைங்கர்யத்தில் நீங்களும் பங்கு கொண்டு பகவானின் திருவருளுக்குப் பாத்திரராகும்படி கேட்டுக் கொள்கிறோம்.