Thirukkannamangai Sri Bhakthavatsala Perumal Temple Chithirai Brahmotsavam – Day 7

0
561 views

Thirukknannamangai_Sri_Bhakthavatsala_Perumal_Day7_21

 

On, 19th April 2016,  Durmugi varusha Chithirai Uthiram ; is the day 7 0f   Chitrai Brahmotsavam of Sri Bakthavatsala Perumal Temple  at Thirukkannamangai. In the morning    Vishesha Thirumanjanam was performed to Sri Bhakthavatsala perumal with Sridevi, Bhoodevi and andal.  In the evening around 5.00 P.M Sri Bhakthavatsala Perumal with his consorts and Sri Andal took part in  Choornabhishegam and had  Vishesha  Thiruvaradhanam then Nel Alavai kandaruli Pavazhakaal Chapparathil went on Thiruveedhi Purappadu.  Again @ 9 PM veedhi Purappadu on “ PUNAI MARA VAHANAM”  and inner prahara purappadu  in SIVAN ALANGARAM.  Lot of Bhaagavathas from nearby villages  participated in the Purappadu and had blessings of  Divyadampatis.

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத்*

தேவதேவனை மூவரில் முன்னிய விருத்தனை*

விளங்கும் சுடர்ச் சோதியை*

விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய அருத்தனை*

அரியைப் பரிகீறிய அப்பனை*

அப்பிலார் அழலாய் நின்ற கருத்தனை*

களி வண்டறையும் பொழில்*

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே.*

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரமான திருக்கண்ணமங்கையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு நடந்து வரும் சித்திரை ப்ரும்மோத்ஸவத்தில், இன்று ஸ்ரீ துர்முகி  வருஷம் சித்திரை மாதம் 6 ந் தேதி 19.04.2016 செவ்வாய்க்கிழமை  காலை வழக்கம்போல் விஸ்வரூபம், திருவனந்தல், காலசந்தி பூஜைகள் முடிந்து, வீதியில் “ செல்வர் “ ஏளி பலி சாதித்து அதன் பின் “ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு  விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.  இன்று 7 ம் உத்ஸவம் “திருக்கல்யாண உத்ஸவமாதலால் காலை வேளை புறப்பாட்டிற்கு பதில் மாலை 5 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், உபய நாச்சியார்கள், ஸ்ரீ ஆண்டாள் சகிதமாக பேரிதாடநம், சூர்ணாபிஷேகம், சிறப்பு திருவாராதனம்  கண்டு, நெல் அளந்து  “ பவழக்கால்” சப்பரத்தில் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார்.  இரவு  8 மணிக்கு நித்தியானுசந்தான கோஷ்டி முடிந்து வீதியில் “ செல்வர் “ ஏளி பலி சாதித்து 10.30 மணிக்கு “ புன்னை மர “ வாகனத்தில் திருவீதி வலம் வந்து, வாகன மண்டபத்தில் இறங்கி அங்கிருந்து  இரவு 01.00 மணிக்கு “ சிவன்” அலங்காரத்தில் சிவனுக்குரிய  “ அஜபா நடனத்தில்”  ஸந்நிதிக்கு எழுந்தருளியபின்  கண்ணாடி திருப்பள்ளி அறையில் ஸ்ரீ தேவி, பூ தேவி, ஸ்ரீ ஆண்டாள் ஸகிதம் ஸேவை ஸாதித்தார்.  ஏராளமான பக்தர்கள் சேவித்து ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.

 

Thirukknannamangai_Sri_Bhakthavatsala_Perumal_Day7_13 Thirukknannamangai_Sri_Bhakthavatsala_Perumal_Day7_18 Thirukknannamangai_Sri_Bhakthavatsala_Perumal_Day7_20 Thirukknannamangai_Sri_Bhakthavatsala_Perumal_Day7_28 Thirukknannamangai_Sri_Bhakthavatsala_Perumal_Day7_31 Thirukknannamangai_Sri_Bhakthavatsala_Perumal_Day7_32 Thirukknannamangai_Sri_Bhakthavatsala_Perumal_Day7_34 Thirukknannamangai_Sri_Bhakthavatsala_Perumal_Day7_33 Thirukknannamangai_Sri_Bhakthavatsala_Perumal_Day7_35 Thirukknannamangai_Sri_Bhakthavatsala_Perumal_Day7_07 Thirukknannamangai_Sri_Bhakthavatsala_Perumal_Day7_09 Thirukknannamangai_Sri_Bhakthavatsala_Perumal_Day7_10 Thirukknannamangai_Sri_Bhakthavatsala_Perumal_Day7_14 Thirukknannamangai_Sri_Bhakthavatsala_Perumal_Day7_00 Thirukknannamangai_Sri_Bhakthavatsala_Perumal_Day7_01 Thirukknannamangai_Sri_Bhakthavatsala_Perumal_Day7_02

Courtesy: Sri Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here