Thirukannamangai Sri Nigamantha Maha Desikan 749th Thirunakshatra Mahotsava Patrikai

0
943 views

thirukannamangai-swami-desikan-utsava-patrikaiThe 749th Thirunakshathra Mahothsavam of Swami Desikan is scheduled to be celebrated from October  2nd  to 12th October, 2015 at Thirukkannamangai in a grand manner. On October 2nd, 2016; Sri Durmukhi varusha Purattasi Hastha nakshatram, vishesha thirumanjanam will be performed for Sri Hayagrivar and Swami Desikan in the morning. Vedam and Prabhandam parayanam will commence thereafter. Every day 200 pasurams each will be recited in the morning and evening for 10 days completing the entire 4000. Alongside, Desika Prabandam, Paduka Sahasram and Desika Stotras will also be recited. Everyday, morning thirumanjanam, sevakalam sattrumurai, madhyam tadiyaradanam will take place followed by evening sevakalam and sattrumurai after Swami Desikan’s purappadu. All astikas are invited to attend Swami Desikan Thirunakshatra Utsavam at Thirukannamangai and get the blessings of Swami Desikan and Sri Bhaktavatsala Perumal.

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பஞ்ச க்ருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்களில் ஒன்றானதும் ஆன திருக்கண்ணமங்கை திவ்ய தேசத்தில் ஓங்கி உயர்ந்து அகண்ட திருமேனியுடன் ஆஜானுபாகுவாக கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பெரும்புறக்கடல் (ப்ருஹஸ்பஹிர் சிந்துநாத்) என்று போற்றப்படும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில்,வடவண்டை ப்ரகாரத்தில் ஸ்ரீ ஹயக்ரீவருடன் தனிச் சந்நிதி கொண்டு எழுந்தருளியிருக்கும் நம் ஆச்சார்யன் ஸ்ரீ நிகமாந்த மஹா தேஸிகனுக்கு 749 வது திருநக்ஷத்ர மஹோத்ஸவம் எதிர்வரும்  அக்டோபர் மாதம் 2, 2016 ஸ்ரீ துர்முகி வருஷம் புரட்டாசி மாதம் 16 ந்தேதி ஹஸ்த நக்ஷத்ரத்தில் திருநக்ஷத்ர மஹோத்ஸவம் தொடங்க உள்ளது.

அன்று காலை 9 மணிக்கு ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ தேஸிகனுக்கு விசேஷ திருமஞ்சனம் ஆகி, வேத கோஷத்துடன், 4000, வேதத் தொடக்கம் ஆகி, தினசரி காலை, மாலை சேவாகாலம், சாற்றுமுறை, மதியம் ததியாராதனை, மாலை 5 மணிக்கு ஆச்சார்யன் அத்யாபக, வேத கோஷ்டியுடன் ஸ்வாமி  தேஸிகனுக்காக ப்ரத்யேகமாக  செய்யப்பட்ட “ நூதன”  திருப்படிச்சட்டத்தில்திருவீதிப் புறப்பாடு, பின் சந்நிதி உள் ஏளியதும் திருவாய்மொழி சேவாகாலம் சாற்றுமுறை சிறப்பாக நடைபெறும்.

துர்முகி வருஷம் புரட்டாசி 25ந் தேதி செவ்வாய்க்கிழமை திருவோண  நன்நாளில் காலை 7 மணி சுமாருக்கு 2 மைல் தொலைவில் உள்ள காவிரியின் கிளை நதியான “வெட்டாற்றில்” இருந்து புனித நீர் யானை மீதும் மற்றும் சுமார் 33கடங்களில், 33 ஸ்வாமிகளால் எடுத்து குடை தீவட்டி, மேள  வாத்ய கோஷ்டியுடன், வெடி, வாண வேடிக்கையுடன் திருவீதி முழுவதும் வலம் வந்து சந்நிதி முன் எழுந்தருளப் பண்ணி ஸ்தபனம் செய்யப்பட்டு,

ஸ்வாமிகளுக்கு சிறிது நேர ஓய்வுக்குப் பின் ததியாராதனை 10 மணிக்கு முடிந்து, சுமார் 11 மணிக்கு ஸ்ரீ ஹயக்ரீவன், ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகனுக்கு வெளி மண்டபத்தில் விஸ்தார திருமஞ்சனம் மதியம் 1.30 வரை விசேஷமாக நடைபெறும்.  ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேகவல்லி தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று,  உடன் ஸ்ரீ ஹயக்ரீவரை சந்நிதி உள் எழுந்தருளப் பண்ணிவிட்டு, ஸ்ரீ தேசிகனுக்கு “கங்கையினும் புனிதமான தர்ஸ புஷ்கரிணி”யில்அபவிருதம்(தீர்த்தவாரி) ஆகி, உடனே விசேஷ அலங்காரம் செய்விக்கப்பட்டு ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள்,ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சந்நிதிகளுக்கு புறப்பாடு ஆகி,  ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சந்நிதிகளில் மங்களா சாசனம் நடைபெறும்.

பின் ஸ்ரீ ஹயக்ரீவர்  மங்களாசாசனம் நடைபெற்று, அதன் பின் சுமார் 6.30 மணியளவில் திருப்பாவை சாற்றுமுறை ஆகும்.

இரவு 10 மணிக்கு ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் விசேஷ புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீ தேசிகன் ஸந்நிதிக்கு எழுந்தருளுவதற்கான புறப்பாடு ஆகி, விசேஷ ப்ரம்மாண்ட வெடி,  வாண வேடிக்கை, விசேஷ நாதஸ்வரக் கச்சேரியுடன் உள் ப்ரகாரத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலன் எழுந்தருளி ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி அருகில் எழுந்தருளியவுடன், ஸ்ரீ தேசிகன் வேத கோஷத்துடன், பஞ்சாயி சொல்லி பூர்ண கும்பம் சமர்ப்பிக்கப்பட்டு, பட்டு, பரிவட்டம், மாலை இத்யாதிகளுடன் எதிர்கொண்டழைத்து பெருமாள் ஸ்ரீ தேசிகன் சந்நிதியை நோக்கி திரும்பி ஏளியவுடன், பட்டு பரிவட்டங்கள் சாற்றி ஆரத்தி ஆனதும்,  தஸாவதார ஸ்லோகம் 13ம்  ஒவ்வொரு ஸ்லோகமாக சேவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒவ்வொரு தளிகை, அதாவது சுமார் 25 KG சுக்கு ஏலம் கலந்த நாட்டுச் சர்க்கரை, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாராபருப்பு, முந்திரி,உலர் திராக்ஷை, பேரீச்சை, டைமன் கல்கண்டு, குண்டு சீனா கல்கண்டு, குழவு ஜீனி, தேங்காய் பூ, கொப்பரை தேங்காய் பல்,அக்ரூட் பருப்பு, அத்திப் பழம், duty fruity, முதலிய பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக நைவேத்யம், கற்பூரம், காளாஞ்சி செய்விக்கப்பட்டு, பின் அனைத்து த்ரவியங்களையும் ஒன்றாக கலந்து சேவிக்க வந்திருக்கும் அனைத்து சேவார்த்திகளுக்கும் சந்தனம், காளாஞ்சியுடன் இந்த ப்ரசாதம் விநியோகிக்கப்பட்டு,

ப்ரசாத வினியோகம் ஆனதும் வழக்கப்படி நித்யபடி காளாஞ்சி மர்யாதை ஸ்ரீ தேஸிகனுக்கு ஆகி,  ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஸ்ரீ தேசிகன் சந்நிதிக்குள் எழுந்தருள்வார்.

மறு அலங்காரம் ஆகி, நவநீதம் தளிகை சமர்ப்பிக்கப் பட்டு திரை திறந்து, பின் நித்யானுசந்தான திருவாராதனம் கோஷ்டி நடைபெறும். அதன் பின் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஸ்ரீ தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளியபின் பெருமாள் முன் சேவிப்பதற்காக 4000 ல் நிறுத்தி வைக்கப்பட்ட 400 பாசுரங்கள் சேவிப்பதற்கு தொடக்கத் தளிகை அமுது செய்து,  தொடக்கம் ஆகி 400 பாசுரங்கள் சேவிக்கப்படும்.  மறுநாள் 12.10.2016 காலை 9 மணியளவில் மடப்பள்ளியிலிருந்து காஞ்சீபுரம் இட்லி,வடை, தோசை, ஜீரா முதலிய தளிகைகளுடன் 54 வகை பக்ஷணங்கள் குடை தீவட்டி இத்யாதி மர்யாதைகளுடன் உள் ப்ரகாரத்தில் ப்ரதக்ஷணமாக எடுத்து வரப்பட்டு ஸ்ரீ தேசிகன் சந்நிதியில் உள்ள ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை சமர்ப்பிக்கப்பட்டு அனைத்து தளிகைகளும் கண்டருளப் பட்டு பெரிய சாற்றுமுறை சுமார் 2 மணி நேரம் நடைபெற்று., அதன் பின் பெருமாள், ஆழ்வார்கள், ஆச்சார்யன், ஆஸ்ரம, ஸ்ரீ மடத்து ஸம்பாவனைகள் மற்றும் கோஷ்டி வேத பாராயண, அத்யாபக ஸ்வாமிகள் சம்பாவனைகள் ஆனதும் தீர்த்த கோஷ்டி ஆனது. அனைத்து ப்ரசாதங்களும் வந்திருந்த 100க்கணக்கான ஸேவார்த்திகளுக்கும் விநியோகம் செய்யப்படும்.

அதன் பின் சந்நிதி மர்யாதை ஆகி சுமார் மதியம் 2 மணியளவில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் பனி முக்காட்டு சேவையுடன் ஆஸ்தானத்து எழுந்தருளுவார். ஸ்ரீ தேசிகன் விடையாற்றி புறப்பாடு நடைபெறும். இரவு 8 மணிக்கு விடையாற்றி உத்ஸவத்துடன் ஆச்சார்யனின் 749 வது திருநக்ஷத்ர மஹோத்ஸவம் இனிதே முடிவடையும்.  ஏராளமான பக்தர்கள் கலந்து சேவித்து ஆச்சார்யன் மற்றும் ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

The schedule of event is given in the patrikai…

thirukannamangai-swami-desikan-thirunakshatra-utsava-patrikai-2016-1 thirukannamangai-swami-desikan-thirunakshatra-utsava-patrikai-2016-2 thirukannamangai-swami-desikan-thirunakshatra-utsava-patrikai-2016-3 thirukannamangai-swami-desikan-thirunakshatra-utsava-patrikai-2016-4

Bank detail for Kaingarya  Sambhavanai

thirukannamangai-swami-desikan-thirunakshatra-utsava-patrikai-2016-5

 

Courtesy : Sri Dr Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here