Yesterday,30 October 2016, Durmukhi Varusha Aippasi Chithirai; Lakshmi Kubera Poojai was conducted in grand manner at Sri Bhakthavatsala Perumal Temple,Every Year on the Aippasi Ammavasai Kubera Jayanthi utsavam is celebrated in this temple. Sri Lakshmi Kuberar is on the northern side of Unnazhi Prakaram, the vishesha thirumanjanam was performed followed by Lakshmi poojai. Lot of astikas took part in the Sri Lakshmi Kubera poojai and had the blessings of Sri MahaLakshmi .
ஸ்ரீ க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரம் எனப்படும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கண்ணமங்கை திவ்ய தேசத்தில், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் சந்நிதி திரு உண்ணாழி ப்ரகாரம் வடபுறத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு இன்று 30.10.2016 ஞாயிற்றுக்கிழமை ஐப்பசி அமாவாசை, சுவாதியை முன்னிட்டு “ குபேர பூஜை” வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. காலை 11.30 மணிக்கு தொடங்கி விசேஷ திருமஞ்சனம் அதைத் தொடர்ந்து ‘ லெக்ஷ்மி பூஜை’ நடைபெற்றது. சிறப்பு அலங்காரம், அர்ச்சனைகள் நடைபெற்ற போது வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் பொன், வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்கள், கரன்சிகளை வைத்து சிறப்பு பூஜையில் பங்குகொண்டு, ப்ரசாதமாக திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
These are some of the photos taken during the occasion….
Photography : Sri Dr Rajagopalan TSR