Srimad Bhagavad Bashyakarar Sahasrabdi Mahotsavam : Invitation for Darshanodaya Event at Thiruvallur

0
1,844 views

Ramanujar_Dharshanodhayam_2.jpg

An Event “DARSHANODAYA” is going to be conducted at Sri Veeraraghava Swamy Devasthanam, Thiruvallur from 4th May 2017 to 7th May 2017. All Asthikas are invited for this grand event.  Here is the invitation regarding Darshanodaya a grand event in Tiruvallur on the occasion of Ramanujar 1000 th year celebration.

“தர்சனோதயம்”

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம:

இத்தகையதொரு பெயர் கொண்ட ஒரு மாபெரும் ஆன்மீக நிகழ்ச்சி மே மாதம் 4ம் தேதி முதல் 7 ம் தேதி வரையிலும் திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ ஸ்வாமி தேவஸ்தானத்தில் நடைபெற உள்ளது. பகவத் ராமானுஜரின் ஆயிரமாவது திருநக்ஷத்திரம் கொண்டாடப்படும் இந்த சமயத்தில் இராமானுஜருடைய அரும்பெரும் கருத்துக்கள் அவர் ஆற்றியுள்ள சீரிய பணிகள் இவற்றையெல்லாம் மக்கள் நன்கு அறிந்து அவர் வழி நடந்திட இந்த மாபெரும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இராமானுஜர் நவ நிதியாக ஒன்பது நூல்களை அருளிச் செய்திருக்கிறார். ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக இராமானுஜருடைய அரும்பெரும் கருத்துக்கள் இந்த உலகம் முழுவதிலும் பரவி வருகின்றன. ஆயிரமாவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறும் இந்த சமயத்தில் இராமானுஜர் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அவைகள் தற்பொழுது நமக்கு எவ்விதம் வழிகாட்டியாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் மக்கள் நன்கு அறிந்திடுவதற்காகத்தான் தர்சனோதயம் என்னும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கலை, இலக்கியம், பண்பாடு, இயல், இசை, நாட்டியம் என்று பலவகைப்பட்ட பல்சுவை நிகழ்ச்சிகளாகவே இவைகள் நடைபெற உள்ளன. இராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒரு மாபெரும் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் நடுவே அறிஞர் பெருமக்களுடைய சிறப்பு சொற்பொழிவுகள் அருளுரைகள் முதலானவைகளும் நிகழ்த்தப்பட உள்ளன. தரிசனம் என்றால் பார்வை என்பதாகவும் ஸம்ப்ரதாயம் அதாவது கொள்கை என்பதாகவும் ஒரு பொருள் உண்டு. தற்பொழுது இராமானுஜ தர்சனத்தின் உதயம். ஆம் இராமானுஜ தர்சனம் என்றால் என்ன என்பதை நாம் அறிவதற்கு தர்சனோதயம் என்னும் இந்த நிகழ்ச்சி ஓர் வழிகாட்டியாக விளங்குகிறதன்றோ. எனவே தர்சனோதயம் நிகழ்ச்சிதனை தரிசித்திட வாருங்கள். நீங்கள் பார்த்து கண்டு களித்து இராமானுஜர் வழி நடந்திட ஒரு அரும்பெரும் வாய்ப்பாக்கிக் கொண்டு நீங்கள் அனைவரும் வர வேண்டுகிறோம். திருவள்ளூருக்கு வாருங்கள்.
பெற்றிடுங்கள் திருவருளை முழுமையாக.

Ramanujar_Dharshanodhayam_1.png

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here