“திருமண்” என்னும் மதச்சின்னம் கேலிக்கூறியதா?

விகடன் குடும்பத்திலிருந்து புதியதாக வெளிவருகிறது “டைம் பாஸ் ” என்னும் இதழ், இதற்கான விளம்பரம் ‘சன்’, மற்றும் ‘புதியதலைமுறை’ டி‌வி களில் வெளிவருகிறது, விளம்பரம் இதுதான் தன்னை காதலிக்கும் பெண்ணிற்காக ஒருவன் பணம் செலவழிக்கிறான்.காதலை பெண் டைம் பாஸ் போல செய்து அவனை ஏமாற்றிவிட்டு செல்கிறாள். இப்போது வாலிபன் பணம் எடுக்க செல்லும் போது ஏடி்‌எம் மிஷின் நாமத்தினை காட்டுகிறதாம்.

ஹிந்துமததில் உள்ளவர்களான வைஷ்ணவர்களின் மதச்சின்னம் திருமண். திருமாலின் பெயர்களை (நாமம்) சொல்லி நெற்றியில் இட்டுக்கொள்வதால் நாமம் எனப்படுகிறது. இதற்க்கு ஏமாற்றதின் அடயாளம் என பொருள்படும்படி ஒரு பத்திரிகை விளம்பரம் செய்வதை நகைச்சுவையாக எடுதுக்கொள்ள முடியவில்லை. இதை போன்றே மற்ற மதச்சின்னங்களை கிண்டல் செய்து விளம்பரம் வெளியிட முடியுமா? அதன் பின் விளைவுகள் என்னவாகும் என்பது தெரியும்.

கார்ட்டூனிற்கும், வைரமுத்து பாடல் வரிக்கும் பிரச்சனை கிளப்புவது எப்படி சரியோ, அப்படி சரியானது ஸ்ரீவைஷ்ணவர்களின் மதச்சின்னம் கேலிப்பொருள் அல்ல என நாம் உணர்துவதும், பத்ரிகையை கண்டிப்பதும். அறச்சீற்றமும், மான உணர்ச்சியும் நமக்கு இல்லயா? திருமண் ஏமாற்றத்தின் அடயாளம் என இவர்களுக்கு யார் சொன்னது? அப்படி நினைப்பார்கள் எனில் இவர்களது ஆன்மீக பத்ரிகைகளில் திருமண் உள்ள பெருமாள் படங்களினை வெளியிடாமால் இருப்பார்களா ?

கேட்க நாதி இல்லையா ?

இப்படியே சென்றால் திருமண் இட்டுக்கொண்டு வெளியே போகமுடியாது. பஸ்சிலும் ரயிலிலும் கூட போகமுடியாத நிலை வரும் கடைக்காரன் கூட பொருள் தரமாட்டான் சகுனம் சரியில்லை என யாரும் எதிரே வரமாட்டார்கள். இது அதீத கற்பனை அல்ல, இதே நிலை கலப்பிரர்கள் காலத்தில் விபூதி விஷயத்தில் சைவர்களுக்கு ஏற்பட்டது,அதற்கு எதிர்ப்பு தெரிவுக்கும் முகமாக உடலெங்கும் வீபூதி தடவிக்கொண்டு வெளியே வரும் பழக்கத்தை சைவ சாமியர்கள் உருவாக்கினார் இன்றும் கூட சில சைவர்கள் உடலெங்கும் வீபூதி தடவியபடி வருகின்றனர் ஆனால் காரணம் அவர்கள் உணராதது.

கண்டனங்களை பதிவுசெய்ய- boss@timepassonline.in phone 044-66802980

Print Friendly, PDF & Email

Notice: Constant WP_USE_THEMES already defined in /home/anudinam/public_html/index.php on line 19