ஆயர் கொழுந்தா யவரால்

0
453

ஆயர் கொழுந்தா யவரால் புடையுண்ணும்,
மாயப் பிரானையென் மாணிக்கச் சோதியை,
தூய அமுதைப் பருகிப்பருகி, என்
மாயப் பிறவி மயர்வறுத் தேனே

Meaning:

I drank deep from the ambrosia of my sweet Lord, wonder-Lord, gem-hued Lord, darling child of the cowherd clan who took their beating, all for stealing butte! Broken are the cords of ignorance that bound me to rebirth.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

முதற்பாட்டில் ப்ரயோஜநாந்தரபரர்களான கேவலர்களை நித்தித்தார்; இரண்டாம் பாட்டில் அநந்யப்ரயோஜநாதிகாரிகள் விஷயத்தில் எம்பெருமான் இருக்கும்படியையருளிச்செய்தார்; ‘ஆக இவ்விரண்டு வகுப்பிலே நீர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்?’ என்று ஆழ்வாரைச் சிலர்கேட்க; நான் அநந்யப்ரயோஜநனாய் அவனைப்பற்றினேன்’ என்று நேரே செல்லமாட்டாமல் ‘அவனை அநுபவித்துக்கொண்டே யிருக்கச் செய்தே விரோதிகள் தன்னடையே கழிந்துபோகப்பெற்றவன் நான்’ என்றாரிதில்.

கீழ்ப்பாட்டில், ஆயர்கொழுந்தென்று கண்ணபிரானை நினைத்தாரே: அப்போதே அவனுடைய மாயச்செயல்களும் நினைவுக்குவர, திருவாய்ப்பாடியில் பஞ்சலக்ஷங்குடியிலுள்ள ரெல்லாலும் மத்தாலே புடைக்கப்பெற்று அழுதேங்கி நிற்கும் மாயத்தைப் பேசுகிறார்.

‘புடையுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச்சோதியை’ என்ற சேர்த்தியழகால், அடியார்கள் மத்தாலும் கயிற்றாலும் கட்டியடிக்கவடிக்க, களங்கமறக் கடையுண்ட மாணிக்கம்போலே திருமேனி புகர்பெற்று வருகின்றமையை அருளிச்செய்கிறவாறு தோன்றும்.

தூயவமுதைப் பருகிப்பருகி = தேவர்களுண்ணும் அமுதமானது பல நியமங்களை அபேக்ஷித்திருக்குமாதலால் அப்படிப்பட்டதல்லாத பகவத்விஷயமாகிற அமுதமே தூயதாகுமென்க. இதனை ஆரப்பருகி என் மாயப் பிறவி மயர்வறத்தேனென்றாயிற்று.

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here