Stri Dharmam Article in Tamil

0
2,873 views

This article mentions few quotes from our scriptures, to bring out some of the points about Stri Dharmam (conduct of Woman). It is from old edition of Sri Ranganatha Paduka Magazine, written by Sri R. Narasimhan. If any of the readers of Anudinam is interested to translate this Tamil article in English for the benefit of readers who cannot read Tamil, please mail us: srivaishnavanews@gmail.com, Thanks

பெண்மையின் தெய்வாம்சம்

பெண்மை இருக்கும் இடம் எங்கும் லக்ஷ்மிதேவி இருக்கிறாள். பிரபஞ்சத்தில் பெண்மை எல்லாம் பிராட்டியின் அம்சமே. ஸ்ரீ பராசர ப்ரம்ம ரிஷியின் இந்த ஸீத்தாந்தத்தை  ஸ்வாமி தேசிகனும்

“புரிஸா  துஜ்ஜ    விஹுஇ அச்சுய லச்சிய இத்தியா ஸந்நோயோ”

என்பதாக அச்சுத சதகத்தில் அருளியுள்ளார். காலசக்கரத்தால் இயங்கிவரும் சம்சார சக்கரத்தில் பெண்மையும் ஆண்மையும் சரிபாதி என்று எல்லோரும் அறிவர். பரம்பொருள் தத்துவமும் இப்படிப்பட்டதே. பிராட்டியும், பெருமாளும் பிணைந்து எங்கும் நீக்கமற நிறைந்து கலந்து ஒரே ஈஸ்வர தத்வமாக இருக்கிறார்கள்.

என்ற ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸுக்தியில் இவ்வர்த்தத்தை தெளியலாம்.


உத்தமர்களோ, உத்தமிகளோ … அவர்களிடத்தில் தெய்வ சாநித்தியம் நிச்சயம் உண்டு. திருவிருத்தத்தில், நம்மாழ்வார் எம்பெருமானைக் காண ஆசைபடும் இடங்களாவன … தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழுவினுள்ளும் ஐயநல்லார்கள் குழிய விழவினும் – அங்கங்கெல்லாம் கா பொன்னாழி வெண்சங்கோடும்    காண்பான் அவாவுவன் நான் …..


சதுர்புஜனான எம்பெருமானை முதலில் உத்தம ஸ்திரீகளின் குழுவில் தேடுகிறார். அடுத்து ப்ராம்ஹணோத்தமர்களின்  மத்தியில் காண ஆசைபடுகிறார். முதலில் உத்தமப் பெண்களிடத்தில் பெருமாளை காண்பான் ஏன்? உத்தமிகள் மங்களத்தின்  இருப்பிடம். அதுவே பிராட்டி உறைவிடம். பிராட்டி இருக்கும் இடத்தில நிச்சயம் பெருமாள் இருக்கிறார். அவர் தான் திருமால் – லக்ஷ்மியிடம் மோஹித்திருப்பவர் ஆயிற்றே. பேயாழ்வாரும் “மலரால் தனத்துள்ளான் தண்துழாய்மார்பன்” என்றார்

வைதீக மடத்தில் பெண்களும் மேன்மை

நம் வைதீக தர்மத்தில் பெண்களுக்கு என்று ஒரு அலாதியான சிறப்பு. மனைவி இல்லாதவர் யாகங்கள் செய்யகூட அர்ஹதை அற்றவர். “கணவனில் பாதி ஆவாள் மனைவி”   என்றது வேதம். கணவனை விட மனைவி வயதில் சின்னவள் தான். அனால் கணவருக்கு எவ்வளவு வயதோ அதே வயதுக்கான கெளரவம் மனைவிக்கும் உண்டு. சாஸ்த்ரம் அப்படித்தான். தம்பதிகளை நமஸ்கரிக்கும்போது இந்த வயது முறையை இன்றும் நாம் அனுஷ்டிக்கிறோம்.
பெண்களை கர்புக்கடவுளாக போற்றுவது நம் நாட்டில்தான். நீதி வழவாத மன்னருக்காக ஒரு முறை , வேதம் ஓதிய வேதியர்களுக்காக ஒரு முறை, மாதர்களின் கற்பின் சிறப்பினால் ஒரு முறை. என மாதம் மும் மழை பொழிவதாக ஒரு தமிழ்ப்பாடலும்  உண்டு.

உயர்வு எல்லாம் பெண்களுக்கே என்ற நிலை நம் ஸநாதன தர்மத்தில் உள்ளது. இப்போது நம் நாட்டில் பெரும்பாலும் க்ருஹங்களில் மாமி ராஜ்ஜியம்தான். அப்படி இல்லை என்று சொல்பவர்கள் உண்மையை மாற்றிச் சொல்பவர்களே. பல விதங்களில் பெண்களுக்கு முக்யத்துவம் தகுந்ததுதான். புருஷர்களை நல்வழிபடுத்தும் விஷயத்தில் ஸ்திரீகள் பெரும்பங்கு வஹீகின்றனர்.

புண்ணிய  பாபங்கள்

எப்படி புருஷர்களின் புண்ணியத்தில் மனைவிக்கு பாதி சொந்தமோ, அதுபோல் மனைவி செய்யும் பாபத்தில் புருஷனுக்கு சரிபாதி சேரும்.


என்றார் நாரதர். நாடு செய்யும் பாபம் ராஜாவையும், ராஜ செய்யும் பாபம் ராஜகுருவையும், மனைவியின் பாபம் புருஷனையும் , சிஷ்யனின் பாபம் ஆச்சர்யனையும் சேரும்” என்றபடி தம்முடையவர்களை தவறை செய்யவிடாமல் திருத்தி நல்வழி நடத்திச் செல்ல வேண்டியவர்கள், தம் கடமையிலிருந்து தவறினால் அதுவே பாபமாகிறது. நமது பாரத நாடு தர்ம பூமி, பாபம்  புண்ணியம் என்ற இரண்டையும்  தெளிவாகப் பேசும்  மகரிஷிகளின் புண்யபூமி. இதில் வாழப்பெறும் நாம் எல்லாரும் பாக்யசாலிகள். உலக நாடுகள் பலவற்றுக்கும் ஒரு சிறந்த ஆன்மிக வழிகாட்டியாக விளங்கி வருகிறது. ஸ்ரீராமனும் ஸ்ரீ க்ருஷ்ணனும் இங்கு தான் அவதாரம் செய்து தர்மோபதேசம் செய்தனர். ” ராமோ விக்ரஹவான் தர்ம”. என்றார் ரிஷி  “க்ருஷ்ணம் தர்மம் சநாதனம்” என்பது உலகறிந்த விஷயம் . வேத இதிஹாச புராணங்கள் நமது கடமைகளை நமக்குத் தெளிவாக உபதேசிக்கின்றன. அவை சொல்லும் தர்மங்கள் எல்லாம் க்ருஹஸ்தர்களை ஆணிவேராக உடையது. க்ருஷஸ்தன் தன் மனைவியைச் சார்ந்தே வாழ்கிறேன். பெண்கள் தன் தம் கடமைகளை, தர்மத்தை சரிவர புரிந்துகொண்ட செயல்பட்டால்  தான் லோக க்ஷேமமும்,மோக்ஷமும் சாத்தியமாகும்.

சுகன்யாவின் சிறப்பு

ஒரு சமயம் ச்யவன மகரிஷி நெடுங்காலம் தவம்  செய்து வந்தார்.  அவரைச்சுற்றி பெரும் புற்று உருவாகிவிட்டது. அவரை மறைத்துவிட்டது. தோழிகளுடன்  அந்த பக்கம் விளையாட வந்த சுகன்யா என்னும் அரசகுமாரி அந்த புற்றில், ஒரு சந்தில், அந்த முனிவர் அங்கு இருப்பது தெரியாமல் விளையாட்டாக குச்சியால் குத்தினால். ச்யவனரின் கண்களில் குச்சி பட்டு, புண்ணாகி இதமாகப் பெருகியது. பின்னல் தவறை உணர்ந்து, அந்த முனிவரின் விருப்பப்படி அவரையே மணந்துகொண்டாள், பதிவ்ரத சிரோமணியாக விளங்கினாள். இந்த வரலாறு ஸ்ரீமத் பாகவதத்தில் ஒன்பதாவது ஸ்கந்தத்தில் குறிபிடப்பட்டுள்ளது. அஷ்வினி தேவர்களும் அவளை மயக்க முடியவில்லை. ச்யவனரும் தன் மனைவியின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பினார். அவர் அஷ்வினி  தேவர்களுடன் சேர்ந்து கொண்டு   அஸ்வினி    தேவர்களின்   உருவதடை எடுத்துக்கொண்டு சுகன்யாவை பரிக்ஷிக்கும் போது தன் கற்பின் வலிமையால் உண்மையான ச்யனரை அடையாளம் கண்டுகொண்டு அந்த மூவரின் அருளையும் பெற்ற  வரலாறு நம் யாவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

குசனாபரின் 100 பெண்கள்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில்  பாலகாண்டம்  32- ஆவது  ஸர்கத்தில் குசநாபரின் 100 கன்னிகைளின் வரலாற்றில் ஸ்திரீ தர்மம் வெளிப்படுகிறது . தங்களை கலந்கபடுது முயன்ற வாயு பகவானிடம் அவர்கள் கூரம் தர்மமாவது.

தந்தை தான் எங்கள் தலைவர். அவரே உயர்ந்த தெய்வம். அவர் யாருக்கு எங்களை மனம் முடிவிக்கிறாரோ, அவர் எங்கள் கணவராவார் – இதன் மூலம் அந்த கன்னிப்பெண்கள் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று தங்கள் திருமண விஷயத்தில் தந்தையின் முடிவே தங்களின் விருப்பம் என்று வெளிபடுத்தினர். ‘ந ஸ்திரீ ஸ்வாதந்த்தர்யம் அர்ஹதி’ என்பதும்  ஸ்ரீ மத் ராமாயண வசனம். காலபோக்கில் இந்த தர்மம் மாறிவருவது கண்கூடு. அதன் விளைவுகளும் தெளிவு. தனது 100 கன்னிகைகளுக்கு குசநாபர், பொறுமையின் பெருமையை கூறும் பொது


பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொறுமையே சிறந்த அலங்காரம் என்றார் மீண்டும்..

க்ஷமா தானம் க்ஷமா சத்யம் க்ஷமா (யாஷாஷ்) புத்ரிகா  : |
க்ஷமா யக்ஞ  க்ஷமா தர்ம  க்ஷமா விஷ்டிதம் ஜகத் ||  ( 1-33-8  )

பொறுமையே  உயர்ந்த தானம், சத்யம், புகழ், யக்ஞம், தர்மம், உலகமே பொறுமையால் நிலைகின்றது என்கிறார் குசநாபர். தந்தையின் உபதேசத்தின்படி மிக பொறுமையோடிருந்து அந்த 100 பெண்களும், தங்களுக்கு வாயு பகவானால் ஏற்பட்ட கொடுமையை வென்றார்கள்.

சீதையும் அநஸூயா  தேவியும்

ஸ்திரீ தர்மம் என்னவென்று இவர்களின் சம்பாஷனை மூலம் நன்கு தெளிவாகிறது .

நகரஸ்தோ வனஸ்தோ வா பாபோ வா  யதிவ சுப
யாசாம் ஸ்திரீணாம்  ப்ரியோபர்த்தா  தாஸாம்  லோகா மஹோதயா: (2-117-21)

2 ஸ்த்ரீனாம் பரமம் தைவதம் பதி : (2-117-22)
3 பதி சுச்ருஷணாத்  நார்யா: தபோ  நாந்யத் விதீயதே  (2-118-9 )
4  சாவித்திரி பதிசுச்ருஷாம் க்ருத்வா ஸ்வர்கே மஹியதே (2-118-10)
5  ரோகினி ந விநா சந்த்ரம் முஹுர்த்தமபி த்ருச்யதே (2-118-11)
6  எவம் விதாஷ்ச ப்ரவரா ஸ்திரீய: ப்ர்த்ரு த்ருட வ்ரதா:
தேவலோகே மஹீயந்தே புண்யேந ஸ்வெந கர்மணா (2-118-12)

மேற்காணும் பேச்சுக்களின்  தொகுத்த பொருள்௦ நாகரீகனோ வனவாசியோ பாபியானாலும் சுபங்கள் இல்லாதவனாயினும், பர்தாவாக இருப்பவனிடம் பிரியமாக இருக்கும் மனைவிக்கு உயர்ந்த  உலகங்கள் காத்திருகின்றன. கணவனே உயர்ந்த தெய்வமாகிறான். அவனுக்கு இஷ்டமான சுஸ்ருஷைகளைச்  செய்வதைவிட உயர்ந்த தவம் பெண்களுக்கு இல்லை.
சாவித்ரியானவள் கணவனுக்கு சுஸ்ருஷை செய்ததால் சுவர்க்கத்தில் கொண்டாடப்படுகிறாள். ரோஹிணீ தன் கணவனான சந்த்ரனை பிரிவதே இல்லை. உயர்ந்த குலப்பெண்கள் கணவரிடம் உறுதியான ஈடுபாட்டுடன்  இருப்பதால் புண்யங்களைப் பெற்று தேவலோகத்தில் சிறப்பிக்க படுகிறார்கள்.

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனும் கௌஸல்யையும்

ஸ்ரீ ராமன் தன் தாயிடம்

1 பர்த்து: கில பரித்யாகோ ந்ருசம்ச: கேவலம் ஸ்திரீயா  :
ஸ பவத்யா ந கர்த்தவ்யோ மனஸாபி விகர்ஹித | (2-24-12  )
2  சுஸ்ருஷா  க்ரியதாம் தாவத் ஸ ஹி தர்ம: சனாதன | (2-24-26)
3  ஜீவிந்த்யா ஹி ஸ்தரீயோ பர்த்தா தைவதம் ப்ரபுரேவா ச (2-24-21)
4  பர்த்ரு சுஸ்ருஷயா நாரி லபதே ஸ்வர்க்கம் உத்தமம் (2-24-26)
5 சுஸ்ருஷாம் ஏவ குர்வீத பர்த்து: ப்ரியஹிதே ரதா |
ஏஷ தர்ம: புற த்ருஷ்ட லோகே வேதே ச்ருத ஸ்ம்ருத ( 2-24-27)

என்று எடுதுரைப்பத்தின் கருத்து,
கணவனை விட்டுவிடுவது பெண்களுக்குக் கொடிய பாபமாகும். மனஸ்சிலும் அத்தகைய இழிந்த செய்யலை நினைக்கக்கூடாது. பதிசுச்ருஷையே  பழைய தர்மமாகும். பெண்களுக்கு உயிருள்ளவும் கணவனே தலைவனும் தெய்வமும் ஆவான். பதிக்கு பணிவிடை செய்வதால் பெண்ணானவள் உயர்ந்த கதியை அடைகிறாள். அவருக்கு நன்மை செய்வதிலேயே நோக்குடன் பணிவிடை செய்யவேண்டும். இதுவே உலக நடைமுறையிலும் வேதங்களிலும் உயர்ந்த தர்மமாக அறியப்படுகிறது.

பெண்களின் பொறுப்பு

இப்படியெல்லாம் நம் ஆன்றோர்கள் குடும்ப க்ஷேமத்திற்காகவும், அதன்வழியே நாடு நலனுக்காகவும் சமுதாய செழிப்புக்காகவும் பெண்களுக்கு தர்மங்களை உபதேசித்துள்ளனர் . பெண்களை அடக்கி வாழ வேண்டும் என்ற எண்ணம் கடுகளவும் கிடையாது. அவர்களை அடக்கி வாழ்வது பெரும் பாபமும்கூட. பெண்கள் சிறிதே பிசகினாலும் சமுதாயத்தில் தர்மங்கள் நிலைகுழைந்துவிடும். அதை ஆழ்ந்து உணர்ந்தே மென்மையான பெண் இனத்திற்குப் பாதுகாப்பாக சில கட்டுபாடுகளையும் தர்ம சாஸ்த்ரங்கள் பேசுகின்றன. பெண்களுக்கு எல்லைகள் உண்டு. அந்த எல்லைக்குள் , பூரண சுதந்திரமும், அதிகமான மரியாதையும் , உயர்ந்த பெருமையும், சந்தோஷங்களும் கூடவே பொறுப்பும் உண்டு.

இதை அறியாமல் சில பெண்கள் நாகரீகம் என்ற கவர்ச்சியில் பல கோணல்களை ஆதரிபதால் விளையக்கூடிய சமுதாய விகாரங்களையும் ணாம் நிதர்சனமாக காண்கிறோம்.
பெண்களுக்கு பதி பக்தி மட்டும் தான் என்ற குறிக்கோள் போதாது. பெண்கள் தங்களுடைய பெண் இன உறவுகுள்ளேயும், அதாவது மாமியார்  , நாத்தனார்,ஓரகத்திகள், ஸஹோதரிகள், நாட்டுப் பெண்கள் முதலியவர்கள், ஒருவருக்கொருவர் பரிவுடன்  உதவி வாழ்ந்தால் தான் க்ருஹத்தில் சகல ஸ்ரேய்யசுகளும் உண்டாகும். உதாரணமாக நாட்டுப் பெண்களிடம் அன்பு காட்டாத வீட்டை தேவதைகள் சபிக்கிறார்கள் என்றெல்லாம் சாஸ்த்ரம் விதிக்கிறது.சாஸ்த்தரமே கைவிளக்காக வாழ்ந்தால் ஒரு குறைவில்லை

அபிரக்ஷது ரங்கபர்த்துரேஷா கருணா காசந பாதுகாமயீ ந: ||

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here