Thirukkannamangai Sri Bakthavatsala Perumal Chitrai Brahmotsavam Commences

0
976 views

Thirukkannamangai brahmotsavam5

Thirukkannamangai Sri Bakthavatsala Perumal Chitrai Brahmotsavam commenced on May 5, 2014; Jaya Varusha Chitra Punarpoosam, with Dwajarohanam in taking place in the presence of Sri Bhaktavatsala Perumal. On the following day, Raksha bandanam took place in the evening followed by purappadu for Sri Bhaktavatsala Perumal, Andal and Ubhaya Nachiyars on Go Ratham.

பெரும்புறக்கடலை அடலேற்றினைப்*
பெண்ணை யானை* எண்ணில் முனிவர்க்கருள்          
தருந்தவத்தை முத்தின் திரட்கோவையை*
பத்தராவியை நித்திலத் தொத்தினை*
அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை*
அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினை*கனியைச் சென்று நாடிக்*
கண்ணமங்கையுட் கண்டு கொண்டேனே*

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதான ” திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் “ஸ்ரீ அபிஷேக வல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு” ஸ்ரீ ஜய வருஷம் சித்திரை மாதம் 26 ந் தேதி (05.05.2014) திங்கட்கிழமை மாலை “சித்திரை ப்ரும்மோத்ஸவத்தில்” தொடக்கமாக ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம் வெகு விமரிசையாக தொடங்கிற்று. இன்று 06.05.2014 ஸ்ரீ ஜய வருஷம் சித்திரை மாதம் 23 ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.22 – 9.30 மணிக்குள் “மிதுன லக்னத்தில்” த்வஜாரோஹணம் சிறப்பான முறையில் நடந்தது.  அதற்கு முன் காலை 7.45 மணிக்கு யாகசாலையிலிருந்து ” கருடக் கொடி” வீதியுலா வந்து சரியாக 8.15 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடாகி த்வஜஸ்தம்பம் அருகில் ஏளி  ஸ்ரீ பெருமாள், கொடி க்கு திருவந்திக்காப்பு ஆகி  மல்லாரியுடன் த்வஜாரோஹணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

06.05.2014 மாலை சுமார் 7 மணியளவில் “ரக்ஷா பந்தனம்” ஆகி ஸ்ரீ பக்ஷிராஜன், ஸ்ரீ விஷ்வக்ஷேணர், ஸ்ரீ சக்ரத்தாழ்வார் புறப்பாடாகி “திக் பந்தனம்” ஆகி ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ உபயநாச்சிமார்களுடன் “கோ” ரதத்தில் திருவீதியுலா கண்டருளினார். பின் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், உபய நாச்சியார்க, ஸ்ரீ ஆண்டாளுடன் “ நூதன கண்ணாடி திருப்பள்ளி அறை” யில் திருப்பள்ளியறை சேவை நடந்தது. அவ்வமயம் ஏராளமான பக்தர்கள் தரிசித்து இன்புற்றனர்.

These are some of the photographs taken during the occasion..

Dwajarohanam

  Thirukkannamangai brahmotsavam5 Thirukkannamangai brahmotsavam6 Thirukkannamangai brahmotsavam7 Thirukkannamangai brahmotsavam8 Thirukkannamangai brahmotsavam9 Thirukkannamangai brahmotsavam10 Thirukkannamangai brahmotsavam11

Day 1 (May 6, 2014)

Thirukkannamangai brahmotsavam Thirukkannamangai brahmotsavam1 Thirukkannamangai brahmotsavam2 Thirukkannamangai brahmotsavam3 Thirukkannamangai brahmotsavam4Thirukkannamangai brahmotsavam Thirukkannamangai brahmotsavam1 Thirukkannamangai brahmotsavam2 Thirukkannamangai brahmotsavam3 Thirukkannamangai brahmotsavam4 Thirukkannamangai brahmotsavam5

Photography by Sri TSR Rajagopalan

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here