Kanchi Sri Sanjeevi Rayar Sannadhi Hanumath Jayanthi Utsavam

1
2,108 views

Ayyangarkulam Sri Sanjeevi Rayar SannadhiOn 14 December 2014,  Jaya Varusha Karthikai Pooram; Hanumath Jayanthi Utsavam was celebrated in grand manner at Sri Sanjeevi Rayar Sannadhi, Ayyangarkulam. This temple was  taken care by Swami Thatha Desikan, As part of the Hanumath Jayanthi  Utsavam, Thirumanjanam was performed to  Srimath Seetha Lakshmana Hanumath sametha Sri Ragunandhanan followed by  Parayanam Sevakalam and  Asthanam. Later Thiruvaradhanam for Hanuman,Later  Manthrapushpam  mariyadhai, Satrumarai and Goshti theertha prasadham. Several Astikas took part in the Utsavam and had the blessings of Perumal.

ஸ்ரீஹனுமத் ஜயந்தியை முன்னிட்டு  14-12 -14 அன்று அய்யங்கார்குளம் ஸ்ரீசஞ்ஜீவி ராயர் ஸந்நிதியில் திருமஞ்ஜநம் , வேதப்ரபந்த பாராயணம், திருவாராதனம், மந்த்ரபுஷ்பம், நிவேதனம் சாத்துமறை, ஸ்ரீரகுவீரகத்யம், ஸ்ரீவரதராஜபஞ்சாசத் , ஸ்ரீதேசிகமஞ்களத்துடன் உத்ஸவம் நடைபெற்றது.விஜயநகரம் ஸமஸ்தானத்தில் ராஜகுருவாக இருந்த கோடிகன்னிகாதானம் ஸ்ரீலக்ஷ்மீகுமாரதாததேசிகன், சிஷ்யர்கள் ஸமர்ப்பித்த நிறைய த்ரவ்யங்களைக்கொண்டு ஸ்ரீகாஞ்சீ திவ்யதம்பதிகளான பேரருளாளனுக்கும் தாயாருக்கும்  விமானம், வாஹனம், மண்டபம்,ஆபரணங்கள் முதலியன நிர்மாணம் செய்து வைத்தார்.

இவ்விதம் ஒருதடவை சிஷ்யர்கள் ஸமர்பித்த த்ரவ்ய்ததுடன் காஞ்சிக்கு வரும் வழியில் திருடர்கள் அதை அபஹரிக்க, தாததேசிகன் ஸ்ரீஹனுமானை இருபது ச்லோகங்களால் ஸ்தோத்ரம் செய்து ஹனுமானின் அனுக்ரஹத்தால் த்ரவ்யங்களை திரும்பப் பெற்றார். அந்த க்ருதக்ஞதையுடன் அங்கு ஸ்ரீஆஞ்ஜநேயருக்கு திருக்கோயில் நிர்மாணம் செய்து  அங்கு அவரை ஸ்ரீஸீதா, லக்ஷ்மணன், ஸ்ரீராமனுடன் ப்ரதிஷ்டை செய்தார். அன்று முதல் இந்த ஊருக்கு அய்யங்கார்குளமென்று பெயர் வந்தது. இக்கோயிலுக்கு ஸமீபமாக நடவாபியை நிர்மாணம் செய்தார். அதில் வஸந்தகாலத்தில் ஸ்ரீவரதனுக்கு சிசிரோபசார உத்ஸவத்தை நட்த்திவைத்தார். சித்ராபௌர்ணமி தினம் .வரதன் நாச்சிமாருடன் இந்த கோயிலுக்கு எழுந்தருள்வார். இங்கு  ஸ்ரீதேசிகஸ்தோத்ரபாடகோஷ்டீ விசேஷமாக முடிவுபெற்று திருமஞ்ஜனம், அலங்காரமாகி, நிவேதனம் ஆனவுடன் நடவாபிக்கு எழுந்தருள்வார். இங்கு ஹனுமான் திருவிலச்சினை உடன் ஸேவைஸாதிப்பது விசேஷமாகும்.
அய்யங்கார் குளம் காஞ்சியிலிருந்து 8 கிலோமீட்டர தொலைவில் மோரணம் ரோட்டில் உள்ளது.
The following are some of the photos taken during the occasion….

Ayyangarkulam Sanjeevi rayar Sannadhi Sri Hanumath Jayanthi -2014-01 Ayyangarkulam Sanjeevi rayar Sannadhi Sri Hanumath Jayanthi -2014-02 Ayyangarkulam Sanjeevi rayar Sannadhi Sri Hanumath Jayanthi -2014-03 Ayyangarkulam Sanjeevi rayar Sannadhi Sri Hanumath Jayanthi -2014-04 Ayyangarkulam Sanjeevi rayar Sannadhi Sri Hanumath Jayanthi -2014-05 Ayyangarkulam Sanjeevi rayar Sannadhi Sri Hanumath Jayanthi -2014-06 Ayyangarkulam Sanjeevi rayar Sannadhi Sri Hanumath Jayanthi -2014-07 Ayyangarkulam Sanjeevi rayar Sannadhi Sri Hanumath Jayanthi -2014-08 Ayyangarkulam Sanjeevi rayar Sannadhi Sri Hanumath Jayanthi -2014-09 Ayyangarkulam Sanjeevi rayar Sannadhi Sri Hanumath Jayanthi -2014-10 Ayyangarkulam Sanjeevi rayar Sannadhi Sri Hanumath Jayanthi -2014-11 Ayyangarkulam Sanjeevi rayar Sannadhi Sri Hanumath Jayanthi -2014-12 Ayyangarkulam Sanjeevi rayar Sannadhi Sri Hanumath Jayanthi -2014-13

Writeup by : Sri Satakopa Thathachariyar

Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here