Vallipuram Sri Adhikesava Perumal Temple

0
2,139 views

Vallipuram-Sri-Adhikesava-Perumal2

Vallipuram, a small village approximately 15 kms from Chengalpattu town in Kanchipuram district is home to an ancient temple dedicated to Vishnu worshipped here as Sri Adikesava Perumal.

This entire region, consisting of Chengalpattu, North Arcot and South Arcot districts of Tamil Nadu formed part of the ancient territorial region known as Tondaimandalam.

The river Palar which flowed through the heart of this region contributed to the prosperity of many settlements in this area, including Kanchipuram, the ancient Pallava capital.

The Pallava and Chola rulers constructed many temples in the villages and towns of this area with the Vijayanagara dynasty also subsequently contributing to the architectural development of the temples already existing there.

The village of Vallipuram, situated close to the Palar, on its northern bank, might have been a Chaturvedimangalam, or a village of scholars learned in the four Vedas, like many others in the nearby areas.

According to the Manasara, an ancient text in Sanskrit on civil engineering, a village should have a Siva temple on the north-east, a Vishnu temple on the south-west with a tank on true west. The village of Vallipuram has such an arrangement, conforming to the rules laid down in this treatise.

The temple, as well as the central sanctum-sanctorum, faces east. The main stone image of Sri Adikesava Perumal, enshrined here is in a standing posture, wearing a Salagrama garland, holding the conch and discus in his upper left and right hands respectively. His lower right hand is in abhaya hasta and lower left hand is in kati hasta, resting near his hip. His consorts, Sri Devi and Bhu Devi are seen on either side. All the three images are seen on the same pedestal. It is interesting to note that unlike most temples, there is enough space between moola-vigrahas and the rear wall for a person to circumambulate these images.

The bronze processional image is also worshipped by the name Sri Adikesava Perumal and has the conch and discus in his upper hands and the lower hands are in abhaya hasta and kati hasta just like the main image. He too wears a Salagrama garland. The beauty of the images, both the achala-bhera and the chala-bhera, are truly captivating. On observing closely, one can even see the beautiful long and pointed tips of the nails of the utsava-vigraha. The other bronze images which are kept here are Chakrattazhvar, Andal and the Snapana Bhera.

This temple is a beautiful specimen of Chola architecture, consisting of a garbha-griha, the antarala (passage between the garbha-griha and the mandapam), the maha-mandapam and the agra-mandapam. In the antarala, the bronze image of Sri Bhakta Anjaneya, can be worshipped, along with the icons of Vishvaksena, Nammazhwar and the great Srivaishnava Acharyas, Sri Vedanta Desika. The mandapam in front houses the processional image of Ambujavalli Thayar, the consort of Adikesava Perumal as also the stone images of all the Azhwars. The image of the Bhudattazhwar with his right hand in jnana-mudra resting on this chest is very reminiscent of a similar one worshipped at Mamallapuram, his birthplace, not too far from Vallipuram.

Above the central sanctum is the vimana in typical Dravidian style of architecture belonging to the Chola epoch. It contains beautiful stucco figures of Lord Vishnu in various forms like Sri Adikesava, Varaha, Venugopala, Lakshmi-Narayana, Krishna, Lakshmi Narasimha and Sita- Lakshmana-Hanumath sametha Sri Kodandarama.

Vallipuram-Sri-Adhikesava-Perumal4

The shrine for Ambujavalli Thayar, enshrining the stone image of this Goddess, is located in the circumambulatory passage, to the right of the main sanctum and faces east. Both the stone and processional deities have the thumb of both palms slightly bent as though beckoning the devotees to her presence. The sanctum of Sri Andal, also east-facing is seen on the other side of the main garbha-griha.

The sanctums for Garuda and Bhakta Anjaneya are also in this temple. While the former is situated directly in front of the main mandapam within the temple precincts, the shrine for Hanuman is located at a short distance from the temple, but directly facing the main sanctum. The sacred temple-tank is located behind the temple. There was once an underground passage leading from the temple to the tank.

Immediately in front of the entrance to the temple is a tall single- stone deepa-stambha belonging to the Nayaka times.

From the post-Nayaka times, the history of this temple is one of neglect. Till recently this temple was in a very dilapidated condition, overgrown with weeds, penetrated by the roots of trees and infested with snakes.

This temple was renovated and reconstructed by philanthropists, with the Samprokshanam having been performed on 29 April ‘2007.

The Anjaneyar Sanadhi also been reconstructed recently with a new look.

Vallipuram-Sri-Adhikesava-Perumal3

வல்லிபுரம் என்ற ஒரு சிறிய கிராமம் செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள பொன்விளைந்தகளத்தூரிலிருந்து சுமார் 1௦ கிலோமீட்டர் தூரத்தில் அமைந்து உள்ளது.

இந்த பழைமை வாய்ந்த திரு கோயிலில் விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள், அம்புஜவல்லி தாயாருடன் சேவை சாதிக்கிறார். இந்த வல்லிபுரம் கிராமம் பாலர் ஆற்றின் வட கரைக்கு அருகில் அமைந்து உள்ளது.

கோவிலின் கருவறையும் ஸ்ரீ ஆதி கேசவ பெருமாளின் திரு உருவம் ஸ்ரீதேவி பூதேவியருடன் நின்ற திருக் கோலத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

சாளக்கிராம மாலையுடனும், வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் தாங்கியும்,மற்றும் கீழ்நோக்கி உள்ள வலது கையில் அபய அஸ்தமும், இடது கையில் கடி ஹஸ்தமும் காட்டி நமக்கு சேவை சாதிக்கிறார்.

ஸ்ரீதேவியும், பூதேவியும் இரண்டு புறமும் காணப்படுகிறார்கள். மூன்று பேரின் திரு உருவமும் ஒரே அடிப்பாகத்தில் அமைந்துள்ளது ஒரு விசேஷம். இதில்ஆச்சரியமான விஷயம் மூல விக்ரகத்தின் பின் புறமும் ஒருவர் சுற்றி வருவதற்கு வழி உள்ளது.

உற்சவ விக்ரஹமும் மூல விக்ரஹத்தை போலவே அமைத்துள்ளது. உற்று நோக்கினால் உற்சவ விக்ரஹத்தில் அழகிய நீண்ட நகங்களுடன் காணப்படுவது ஒரு விசேஷம்.

கோவிலின் சுற்று பகுதியில் முதலில் ஸ்ரீ அம்புஜவல்லி தாயாரும், பிறகு ஸ்ரீ ஆண்டாளும் தனி சன்னதிகளில் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்கள்.

Vallipuram-Sri-Adhikesava-Perumal1

கோவிலில் சக்ரத்தாழ்வர், ஆழ்வார்களும், தனி சன்னதியில் கருடாழ்வார் அமைந்துள்ளனர். கோவிலின் எதிரில் உயர்ந்த ஒரே கல்லில் அமைந்த தீபஸ்தம்பம் உள்ளது.

மேலும் தீபஸ்தம்பதை தாண்டி, கோவிலின் எதிரில் அழகிய ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தனி சன்னதியில் நமக்கு அருள்பாலிக்கின்றனர்.

இந்த திருக்கோயில் ஆஸ்திகர்களின் உதவியுடன் சிறந்த முறையில் கட்டுமான வேலைகள் நடந்து சம்ப்ரோக்ஷணம் 29 ஏப்ரல் 2007 ல் சிறப்புற நடந்தது. (பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை ‘சம்ப்ரோக்ஷணம்’ என்பர்.’ப்ரோக்ஷணம்’ என்றால்’தெளித்தல்’என்று பொருளாகும்.)

ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் சன்னதியும் சமீபத்தில் புனருத்தாரணம் செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் அமைந்துள்ளது.

தற்சமயம் காலையில் 8 முதல் 9 வரை ஒரு வேளை மட்டும் தான் திறந்திருக்கும். அர்ச்சகர் பொன்விளைந்த களத்தூரிலிருந்து வந்து பெருமாளுக்கு கைங்கர்யம் செய்கின்றார்.

மற்றபடி விசேஷ நாட்களில் நல்லபடியாக உத்ஸவங்களும் நடை பெறுகின்றன.

அர்ச்சகர் ஸ்ரீ சௌமியன்-பட்டர் செல்:- 94432 79185

சென்னையில் ஸ்ரீ ரங்கநாதன் அவர்களின் முயற்சியால்தான் இந்த திருக்கோயில் 2007 ல் நல்ல முறையில் புதுப் பொலிவுடன் கட்டப்பட்டு சம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட்டது.

இந்த வல்லிபுரம் ஸ்ரீ அம்புஜவல்லி நாயிகா சமேத ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் கோயில் நித்ய ஆராதனை திட்டத்தில் எல்லோரும் சேர்ந்து ஸ்ரீ அம்புஜவல்லி நாயிகா சமேத ஸ்ரீ ஆதி கேசவ பெருமாளின் அருளைப் பெற வேண்டும் என அன்புடன் வேண்டுகின்றோம்.

Vallipuram-Sri-Adhikesava-Perumal

The temple is open only in the mornings from 8 to 9 am.

Contact: Sri.Sowmiyan – Battar

Mobile : 94432 79185 <> Landline:044-27441182

மேலும் பல உத்ஸவங்களையும் நீங்கள் செய்து, பகவத் கைங்கர்யத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும்.

ஸ்ரீ ரங்கநாதன் செல்:- 98408 16446 மற்றும்

ஸ்ரீ ராம்மோகன் செல்:- 98410 17089

Villipuram-Sri-Adhikesava-Perumal

Courtesy: Sri Sukumar Santhangopalan


Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here