Periazhwar Thirumozhi – Krishna Anubhavam

0
1,207 views

தேனுக னாவி செகுத்து பனங்கனி

தானெறிந் திட்ட தடம்பெருந் தோளினால்

வானவர் கோன்விட வந்த மழைதடுத்து

ஆனிரை காத்தானால் இன்று முற்றும் அவையுய்யக் கொண்டானால் இன்று முற்றும்.

பதவுரை

தேனுகன்

தேநுகாஸுரனுடைய
ஆவி

உயிரை
செகுத்து

முடிக்க நினைத்த அத்தேனுகனை
பனங்கனி

(ஆஸிராலிஷ்டமான) பனைமரத்தின் பழங்கள் (உதிரும்படியாக)
எறிந்திட்ட

(அந்த மரத்தின் மேல்) வீசியெறிந்த
தடப்பெரு தோலினால்

மிகவும் பெரிய தோலாலே, (கோவர்த்தன பர்வதத்தை எடுத்து)
வானவர் கோன் விடவந்தமழை தடுத்து

தேவேந்திரனது ஏவுதலாலே வந்த வர்ஷத்தைத் தவிர்த்து
ஆன் நிரை

பசுக்களின் திரளை
காத்தானால்

ரக்ஷித்தருளின கண்ணபிரானால்

இன்று முற்றும்

அவை

அப்பசுக்கூட்டத்தை

இன்று முற்றும்

 

விளக்க உரை

***- தேநுகன்-கழுதை வடிவங்கொண்டு கண்ணனை நலிய வந்த அசுரன்; இவ்வரலாற்றை “வானவர் தாம் மகிழ” (1-5-4) என்ற பாட்டின் உரையிற் காண்க. செகுத்து-செகுக்க; எச்சத்திரிபு. பனை+கனி, பனங்கனி; “பனை முன் வலிவரின் ஐ போயமும்” என்ற சிறப்பு விதி காண்க. தான் -அசை. ‘ஆனிரை காத்தானால்’ என்பதனால் அநிஷ்ட நிவர்த்தனமும், ‘அவை உய்யக்கொண்டானால்’ என்பதனால் இஷ்ட ப்ராபனமும் சொல்லப்படுகின்றது; அதாவது- வந்து ஆபத்தை அகற்றி, வயிறு நிரம்பப் புல்லுந்தண்ணீருங் கொடுக்கை.

Source: http://dravidaveda.org

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here