Kaliyanum kavitharkiga simhamum – Part II, Sri.U.Ve. Dr.Satagopa Thathacharyar Swamy

0
26,220 views

As a continuation of the article “Kaliyanum kavitharkiga simhamum” published on the 8th of December, this article presented here is  written by Sri.U.Ve. Dr.Satagopa Thathacharyar Swamy of Kanchi.

முதலாழ்வாரின் திருநக்ஷத்ரத்தில் – ச்ரவணத்தில்  அவதரித்த ஸ்வாமி தேசிகன்  கடைசி ஆழ்வாரான திருமங்கைமன்னனின் திருநக்ஷத்ரத்தில்  அவதாரஸமாபநம் செய்தார் என்பர்., , ஸ்ரீதிருக்குடந்தை தேசிகன்,  ஸ்வாமிதேசிகனின் ஸஹஸ்ரநாமத்தில் ஸௌம்யகார்திக ராகா ஸ்ரீபர்யங்காரோஹணப்ரிய ஃ என ஸாதிப்பதால்  அன்றைய திதி பௌர்ணமியாகும், இன்று கார்திகை பௌர்ணமீ,  இன்று ஆசார்யனுக்ரஹத்தால்  கலியனும் கவிதார்கிகஸிஹ்மமும் என்பதான வ்யாசத்தை ஸேவிக்கும் பாக்யம் கிடைத்தது. அதில் ஸ்ரீமத்பாகவதத்தில் ஆழ்வார்களின் அவதாரத்தை குறிப்பிட்டபடி ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளில் ஆசார்யர்களின் அவதாரம் ஸூசிதம், இதில் பொலிக பொலிக என திருவாய்மொழியில் நம்மாழ்வார் ஸ்ரீபாஷ்யகாரரின் அவதாரத்தை குறிப்பிட்டபடி திருமங்கை மன்னன் பொன்னை மாமனியை,,,,,,காணும் தண்காவிலே என்கிற பாசுரத்தால் ஸ்வாமிதேசிகனின் அவதாரம் ஸூசிக்கப்பட்டது என பெரியோர்கள் பணிப்பர் என மிகவும் அழகாக எழுதியதை வாசித்த பிறகு இதையும் சேர்த்து வாசித்தால் ரஸமாகும்  என்பதால் இதை விஞ்ஞாபிக்கிறேன்.

மாறன் பணித்த நான்மறைக்கு  திருமங்கைமன்னன் ஸாதித்த ஆறு ப்ரபந்தங்களும் ஆறங்கமாக விளங்கின  என கூறுவதால் நம்மாழ்வார் ஸாதித்தமறையிலும் ஸ்வாமி தேசிகனின் அவதார ஸூசனம் மறைந்திருப்பதை ஸஹ்ருதயர்கள் விளக்கி உள்ளார்கள், ஆம், நம்மாழ்வாரின் ப்ரதம ப்ரபந்தமான திருவிருத்தத்தில்  26 ஆம் பாசுரம்,

நானிலம் வாய்க்கொண்டு நன்னீரறமென்று கோது கொண்ட

வேனிலஞ்செல்வன் சுவைத்துமிழ்பாலை,கடந்த பொன்னே

காநிலந்தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃக்காவுதம்

பூந்தேனிலம்சோலையப்பாலது, எப்பாலைக்கும் சேமத்ததே, , என

(நானிலம் வாய் கொண்டு ) ஆதித்யனானவன் நால்வகைப்பட்ட நிலத்தை  வாயிலே கொண்டு,. (நன்னீரித்யாதி) இதினுடைய ஸத்தையான நீர்  அறும்படிமென்று கோதாக்கி அக்கோதை வாயிலே கொண்ட ஆதித்யனானவன் தன்னுஷ்ண கிரணத்தாலே சுவைத்து ஆச்ரயம் பொறாமையுமிழந்து பாலையாயிற்று. (கடந்த)ஸம்ஸாரத்தை கடந்த என்றபடி. (பொன்னே) ஸம்போதனம்.,பொன்போன்ற நிறம் கொண்டவளே.

(கால்நிலமித்யாதி) தேவர்கள் ஹவிஸ்ஸு கொள்ளுமிடத்தில் ஸம்ஸாரவெக்காயமதட்டாமே ஒரு யோஜனைக்கவ்வருகே நின்று பின்னையுமிது பொறுகக்மாட்டாமை  அவ்வருகே போய்ச்சர்த்த பண்ணுவார்கள்இப்படியே அங்குற்றைக்கு  பரமபதம்,அங்கனிருக்கிற நித்யஸூரிகள் பூமியிலே இழிந்து திருவெஃகாவிலே தங்களுடய அபிமதவிஷயங்கிடக்கையாலே ப்ரதக்ஷிமப்ரணாமாதிகள்

பண்ணாநிற்பார்கள்

(வெஃக்காவுது) – இப்படிப்பட்ட திருவெஃகா .உது என்றால் தூரம் இல்லை  அருகிலுமில்லை  என பொருள். இதுபோன்ற தலைவிக்கு நகரத்தை காண்பித்த தலைவன் வேறு  யாரேனும்

உண்டா என்ற கேள்விக்கு இராமாயணத்தில்  உள்ள உதாஹரணம் காண்பிக்கிறார், இராமர் சீதைக்கு அயோத்தியை காண்பி்த்தார் என்கிறார்,  ஏஷா ஸாத்ருச்யதே அயோத்யா .அதோ அயோத்தி தென்படுகிறது பார்த்தாயா என்கிறது காண்க, அப்போது  நாயகி அங்கிருந்து பார்த்தபோது ஹிமோபவநம் என்றும் திருத்தண்கா என்றும் தூப்புல் என்றும் கூறப்படும் விளக்கொளி பெருமாள்  தீபப்ரகாசர்  ஸந்நிதியை காண்பித்து  அங்கே தெரிவது என்ன  என்று கேட்கிறாள் இதற்கு  விடை அளிக்கிறார்.. அபூந்தேனிலம்சோலையப்பாலது-அழகியமலர்கள் தேனை தங்களிடம் தக்கவைத்துள்ள சோலைசூழ்ந்த இடமாகும். எப்பாலைக்கும் சேமத்ததே

.. அனைத்துவிதமான பாலை நிலங்கள் மூலம் உண்டாகவல்ல அனைத்துவிதமான துன்பங்களையும் போக்கி நமக்கு ஏற்ற பாதுகாப்பை அளிக்கவல்ல இடம் அதுவே ஆகும்,

இந்த பாசுரம் சரணாகதி பாசுரம் என சான்றோர்கள் பணிப்பர்.

ஸம்ஸார வெப்பம் தாங்காமல் ஸர்வேச்வரனை அணுகி இன்பத்துடன் இருத்தல்  கூறப்பட்டது, திருவெஃகாவை பற்றி குறிப்பிட்டபோதிலும் அதன் அருகிலுள்ள சோலைகள் சூழ்ந்த இடம் என காண்பிப்பது திருத்தண்கா என்று பலர் உரைப்பர். கலாபேதமில்லாமல்  அரும்பதவுரைகள் சிலவற்றில் இவ்வாறே உள்ளது. திருத்தண்காவில் உள்ள ஸ்ரீவிளக்கொளி பெருமாளை பற்றி  ஸ்வாமி தேசிகன் சரணாகதி தீபிகை அருளிச்செய்துள்ளார்.மேலும் அபிநவ தேசிக ஸ்ரீமதுபயவே உத்தமூர் ஸ்வாமி எழுதிய வ்யாக்யானத்தில்  திருத்தண்காவில்  அவதரிக்க உள்ள ஸ்வாமி தேசிகன், உலகினர் உய்யும் விதமாக ப்ரபத்தி சாஸ்த்ரத்தை விரிவாக எடுத்துரைத்து அனைவரும்  ஸர்வேச்வரனை அண்டும்படிச்செய்ய உள்ளார், ஆதலால் நாமும் அங்கு செல்வோம் என்பதாக ஆழ்வார்  குறிப்பிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.ஆக நம்மாழ்வாரால்  ஸ்வாமி தேசிகன் அவதாரம் ஸூசிதம், உயர்ந்த திவ்யதேசம்.

நாம் வைதிகர்களாயினும்  காலத்தின் கோலத்தால் விதேசத்தாரின்  ஆசாரங்களை, விழாவை  கொண்டாடுகிறோம், ஆங்கிலமாதத்திலேயே நாம் ஜீவிக்க சம்பளத்தை பெறுகிறோமல்லவா. தமிழ்மாதத்தில்  சம்பளத்தை பெறவில்லையே.டிசம்பர் மாதம் வருடத்தின் கடைசி, மற்றும்  விராமகாலம் , இந்த ஸமயத்தில் போகத்தை  அனுபவிக்க    பாரத தேசத்தில் விசேஷமான  இடத்துக்கும் விதேசங்களுக்கும் வரும்படி அநேகவிதமான சலுகைகளுடன் கூடிய விளம்பரத்தை பார்க்கிறோம்.,இந்த க்ரமத்தில்  ஆஸ்திகர்கள் சாஸ்த்ரஸம்மதமும்  அதிகளவில்  சிலவும் இல்லாததான இந்த ஹிமோபவனத்துக்கு ரிஸார்ட்டுக்கு வந்தால்  ஸம்ஸார வெப்பத்தை போக்கலாம்,எம்பெருமான் மற்றும் ஆசார்யன் அமுது செய்த ப்ரசாதம்,  ஸ்வச்சமாந தீர்தம்  யாவும் கிடைக்கும், ஒரு தினத்துக்கான சிலவு  ரூ 700 மட்டுமே. ஆநந்தமாக  திவ்யதேசத்து எம்பெருமானை ஸேவித்து ச்

செல்லலாம். தொண்டீர் எல்லீரும் வாரீர். கோவிந்தனை பாடிப்பறை கொண்டு சம்மானம் பெறுவோம்.

ஒரு புருஷாயுஸ்ஸில்  நூற்றுக்கணக்கான க்ரந்தங்களை அனுக்ரஹித்தவர் என்ற பெருமை ஸ்வாமி தேசிகனுக்கே உறியதாகும், அதுபோல் அந்த க்ரந்தங்களை முழுவதுமாகவும், மற்றும் ஸ்வாமி தேசிகன் விஷயகமான  ப்ரபத்தி, வைபவப்ரகாசிகை முதலிய 300க்குமதிகமாக அநேக க்ரந்தங்களை புருஷாயுஸ்ஸின் பத்தில்  ஒரு பங்கு காலத்திலேயே  அடியார்கள் அறியும் வண்ணம்  ப்ரகாசநம் செய்தவர் என்ற பெருமை ஸ்ரீமத்வேதாந்ததேசிகபதாம்புஜஸேவாரஸிகர் என ஸ்வாமி தேசிகனின் அவதாரஸ்தலத்தில்  ஸ்வாமியின் திருவோலக்கத்தில்   ஸ்ரீதேசிகனடியார்களால் பஹுமானிக்கப்பட்ட ஸ்ரீமான் உப்பிலியப்பன் கோயில் வரதாசார்ய சடகோபாசார்யருக்கே  உறியதாகும்,  ஸ்வாமி தேசிகன் செய்த உபகாரத்தை ஸ்மரித்து பூவில் சேர்ந்த நாருபோலுள்ள தாஸனின் இந்த சிறிய வ்யாசத்தை , ஸ்ரீஸ்வாமிதேசிகனின்  தீர்தநாளில் விஞ்ஞாபித்துக்கொள்கிறேன்,

ஸ்வாமி தேசிகன் விஷயமாக அநேகம் ஆசார்யர்கள் ஸ்தோத்ரம் செய்துள்ளார்கள். இந்த க்ரமத்தில் காஞ்சீபுரத்தில் ஸ்ரீதேவாதிராஜன் ஸந்நிதியில் ஸ்ரீகார்யதுரந்தரராக ஸுப்ரஸித்தரான ஸ்ரீலக்ஷ்மீகுமாரதாததேசிகனின் பாகினேயரின் பேரரான அஸ்தோகத்வரி கச்சி கடாம்பு கவிவிதவன்மணி என  பிருதத்தால் ஸுப்ரஸித்தரான ஸ்ரீ வேங்கடாத்வரி என்பவர் விச்வகுணாதர்ச சம்பு எனும் நூலில் ஸ்வாமி தேசிகன் விஷயமாக மிகவும் அத்புதமாக  மிகுந்த பக்தியுடன் கூடி அனுக்ரஹித்த ரத்னமயமான ச்லோகங்கள் ஸஹ்ருதயர்களின் ஆஸ்வாதனத்துக்காக விஞ்ஞாபிக்கப்படுகி்ன்றன,

श्रीरङ्गेश्वरशासनादघिगतश्रुत्यञ्चलाचार्यकं

दान्तं यं कविवादिदन्तिहरिरित्यार्या वदन्ति क्षितौ।

सर्वस्यामपि हन्त तन्त्रसरणौ स्वातन्र्यमासेदुषां

सुत्रामा स हि वेङ्कटेशकविराडत्राविरासीत्प्रभुः।।

ஸ்ரீரங்கநாதனின் திவ்யாஞையினால் வேதாந்தாசார்யர் என அருளப்பாடை பெற்றவரும் இந்த்ரியங்களை ஜயித்தவராகவும், கவிதார்கிகஸிஹ்மம் என்றும் பெரியோர்கள் எந்த ஸ்வாமியை அனுஸந்திக்கிறார்களோ எல்லா தந்த்ரத்திலும் ஸ்வாதந்த்ர்யத்தை பெற்றவர்களில் ச்ரேஷ்டரான அந்த ஸ்ரீவேங்கடேசகவியானவர் இங்கு ஸ்ரீதூப்புலில் அவதரித்தார்,

भेदाभिदाविषयवादापतद्दुरुपपादार्थसाधकमदो-

त्सादावहाद्भुतमखादापगास्यदविनोदाभिजातभणितिः।

पादारविन्दनतखेदापहारचतुरोदारमाधवगुणा-

स्वादाभितुष्ट इह मोदाय वो भवतु वेदान्तदेशिकमणिः।।

ஜீவப்ரஹ்மங்களுக்கு ஐக்யத்தை, மற்றும்  பேதத்தை கூறும் ச்ருதிகளில் ஒன்றை மட்டும் ஸாதிக்கிற வாதிகளின் கர்வத்தை அடக்கி எல்லாச்ருதிகளுக்கும்  விரோதம் வாராமல் சரியான பொருளைகூறுவதால் கங்கையின் ப்ரவாஹம் போல் தோஷமற்ற வாக்யத்தை உடையவராய், மேலும் தன் திருவடியை ஆச்ரயித்த ப்கதர்களின் கஷ்டத்தை போக்குவதில் ஸமர்தராய் உதாரருமான மாதவனின் எம்பெருமானின் பக்தவாத்ஸல்யாதிகுணங்களை ஆஸ்வதிப்பதில் ஸந்தோஷத்தை அடைபவரான ஸ்ரீமத்வேதாந்தேசிகன் இந்த காஞ்சியில் உங்களுக்கு ஆநந்தத்தின் பொருட்டு இருக்கட்டும்

नानाम्नायपरिश्रमं कलयतां शास्त्रेषु नास्त्येव धीः

सत्योरप्युभयोस्तयोर्न  सुलभा सा हि क्षितौ साहिती।

अप्येतासु  सतीषु नास्ति विनयो नाचारभक्तिक्षमा-

चातुर्यः स च सा च सा च स च ताश्चालम्ब्य खेलन्त्यमुम्।।

நான்கு வேதத்தை அறிந்தவர்களுக்கும் சாஸ்த்ரத்தில் ஞானமிராது, அவர்கள் கேவலம் அத்யயனம் செய்தவர்களாவர், அத்யயனமும் செய்து சாஸ்த்ரபரிசயமிருப்பினும் அவர்களுக்கு ஸாஹித்யத்தில் ஞானம் கிடைப்பது அரிது, ஓரிடத்தில் இந்த மூன்றுமிருந்தாலும் அங்கு  விநயமிராது, ஆசாரம், பக்தி, பொறுமை, மற்றும் க்ரியா ஸாமர்த்யமிராது, வேதம், சாஸ்த்ரஞானம், கவிதாபுத்தி,விநயம், மற்றும் ஆசாரம், பக்தி, க்ஷமா,ஸாமர்த்யம்  இவை எல்லாம்  ஸ்வாமி தேசிகனை ஆச்ரயித்து  விளையாடுகிறதுகள், எல்லாவற்றையும் பெற்றவர் ஸ்வாமி ஒருவரே என.

अर्वन्तमास्ये समुपास्य देवं गर्वं तमोजं कुदृशां प्रशान्तम्।

कुर्वन्तमेनं गुरुमन्तरेण गुर्वन्तरं कोत्र गुणी वृणीते।।

பரிமுகனை உபாஸநம் செய்து ,அஞ்ஞானத்தினால் உண்டான குத்ருஷ்டிகளின் கர்வத்தை பங்கம் செய்பவரான ஸ்ரீமத்வேதாந்த தேசிகனை விட்டு வேறொருவரை புத்தியுள்ளவன் குணமுள்ளவன் ஆசார்யனாக வரிப்பான், புத்தியுள்ளவன் ஸ்ரீதேசிகனை ஒழித்து மற்றவரை ஆசார்யனாக   ஏற்கமாட்டான்.

वयस्य मास्मैवमवोचः।यदेतत्पक्षावलम्बनतः पक्षान्तरस्वीकार एव वर इति मे प्रतिभाति।

புத்தியுள்ளவன் ஸ்ரீதேசிகனை விட்டு மற்றவரை ஆசார்யனாக   ஏற்கமாட்டான் என கூறவேண்டாம், இவரின் கொள்கையை பின்பற்றுவதை விட மற்றவரின் பக்ஷத்தை  ஏற்பதே மேல் என எனக்கு தோன்றுகிறது, காரணம் கேள்மின்,

 

यस्मिन् पक्षेस्ति मोक्षो गुरुणि  लघुनि वा साधनेप्यप्रयुक्ते

श्लाघाहेतुः श्रमार्थव्ययकर यजनाद्यग्र्यकर्मप्रहामणम्।

तं हन्तोपेक्ष्य पक्षं श्रयति जगति कः काम्यवेदोक्तकर्मा-

नुष्ठानावश्यकत्वप्रकटनकठिनं वेदचूडार्यमार्गम्।।

மற்றவரின் பக்ஷம் (ஏகதேசிகளின் )மிகவும் ஸுலபமானது, அந்த பக்ஷத்தில் மோக்ஷத்தை அடைய  குரூபாயத்தை ,அல்லது லகுவான-ப்ரபத்திரூபமான உபாயத்தையோ அனுஷ்டிக்கவேண்டாம், உபாயானுஷ்டானமில்லாமலே மோக்ஷம் கிடைக்கும், மேலும் பணத்தை சிலவு செய்தும் சரீரத்தை, வருத்தியும் ப்ராஹ்மணன் செய்யவேண்டிய  எந்த கர்மாவையும் அனுஷ்டிக்கவேண்டாம். இப்படிப்பட்ட ஸுலபமான மதத்தை உபேக்ஷித்து வேதத்தில் கூறிய நித்யகர்மானுஷ்டானம் முதலியன நிர்பந்தமாக  செய்யவேணும் என கூறும் ஸ்வாமி தேசிகனின் வழியை லோகத்தில்  எவன்தான் ஆச்ரயிப்பான். ஆதலாலேதான்  தற்சமயம் ஏகதேசிகள்  நாங்களே  அதிகம்  என கர்வம் கொள்கிறார்கள் போலும்

பதில் ,

वेदान्तार्यविशोधितं हितपथं व्याधूय साधूचितं

चापल्यादनुरुन्धते तदितरं पन्थानमन्धा नराः।

इष्टं भक्षय कान्तया च विहरेत्येवं प्रियालापनं

रोगार्ताश्चपलाः स्तुवन्ति न तु तं यः पथ्यवादी भिषक्।।

சிறிதும் ஞானமில்லாத மனுஷ்யர்களே ஸ்ரீவேதாந்தாசார்யரால் சோதிக்கப்பட்டதும் ஸாதுக்களுக்கு ஹிதத்தை, மற்றும் ச்ரேயஸ்ஸையும்  கொடுப்பதான  வழியை விட்டு சாபல்யத்தால் மற்றவரின் வழியை பின்பற்றுகிறார்கள்,லோகத்திலும் இதை காணலாம், சாஸ்த்ரநிஷித்தமான பதார்தத்தை உட்கொள்ளலாம், கால ஸமய பேதமில்லாமல் வேண்டியபடி  பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம்  என ப்ரியமானதை கூறும் வைத்யனையே சபலர்கள், பின்வரும் விளைவுகளை சிந்தியாமல் நல்ல வைத்யர்  என ஸ்தோத்ரம்  செய்கிறார்கள், பத்யத்தை –ஹிதத்தை கூறும் வைத்யனை  ப்ரஸம்ஸை செய்வதில்லையல்லவா. அதுபோல் தான் இதுவும்.

आम्नायमौलिगुरुणा करुणाकरेण

नावातरिष्यत यदीह भवाब्धिनावा।

अज्ञातभक्ति जगदश्रुतसच्चरित्र-

मज्ञातशास्त्रमभविष्यदवैदिकं  च।।

ஸம்ஸாரஸாகரத்தை கடத்துகிற படகுரூபமான கருணாமூர்தியான ஸ்ரீமத்வேதாந்ததேசிகன் இந்த லோகத்தில் அவதரியாமல் இருந்தால் இந்த லோகம் பக்தியை,மற்றும் சாஸ்த்ரத்தை அறியாததாயும் ,நன்னடத்தையை கேள்வி படாததும், அவைதிகமாகவும் ஆகியிருக்கு்ம்.

निशमयति यःकिलदृसा निशामयत्यङ्घ्रिणा च यो विश्वम्।

गजतुरगौ वदने यौ तैः सह वेदान्तदेशिको गण्यः।।

गम्भीरशब्देन विशालमोहदशापिशाचग्रहमोचनेन।

घण्टा हरेर्वेङ्कटनाथरूपा कल्याणमुल्लासयति श्रुतीनाम्।।

ஸ்வாமி தேசிகன்,

கண்ணால் கேட்பவரான சேஷன்- பதஞ்சலிமஹரிஷி காலில் கண்ணை உடைய கௌதம மஹரிஷி ,கரிமுகன் கஜானன் மற்றும் பரிமுகன் ஸ்ரீஹயக்ரீவன், இவர்களுடன் எண்ணத்தகுந்தவர், அல்லது தற்சமயமுள்ள மற்றவர்களின் ஸமூஹத்தில் சேர்ந்தவரல்ல.,

वेदान्ताचार्यशब्दोस्मिन्वेदान्तस्थापने क्षमः।

इमं विवेकं कुर्वन्तो दान्ताचार्यं च तं विदुः।।

வேதாந்தாசார்யசப்தமானது வேதாந்தஸ்தாபனம் செய்த இவரிடத்திலேயே பொருந்தும், இந்த விவேகத்தை அறிந்தவர்கள் அவரை இந்த்ரியங்களை ஜயித்தவராகவும் அறிகிறார்கள், வேதாந்தாசார்யர் என்பதில்   வே  சென்றால்  தாந்தாசார்யர் ஆவார் என,

कथं नाम द्रुहिणग-हिणीचिकुरनिकुरम्बचुम्बिचम्पककुसुमसुकुमारतराः

कविकथककण्ठीरवगुरोरपि गिरो दुस्तरप्रस्तरनिष्ठुरबंहिष्ठसासूयहृदय

निर्भेदाय जायन्ते।

ப்ரஹ்மதேவனின் மனைவியான ஸரஸ்வதியின் முடியை அலங்கரிக்கிற சம்பக பூவைப்போல் ம்ருதுவான கவிதார்கிகஸிஹம்த்தின் வ்யாக்யானரூபமான வாக்குகள் எப்படி கற்களை போல் கடினமானதாக ஆயிற்று .

वेदान्तार्यगिरःप्रसूनमृदवो मोदं दधानाः सतां

प्रौढग्रावकठोरकाण्यपि परं भिन्दन्ति हृन्दि द्विषाम्।

नन्दाद्यार्यजनाभिनन्दितमृदुस्पर्शोपि पादो हरेः

दुर्भेदे शकटासुरे तु शतकोट्याकारमागान्न किम्।।

வேதாந்தாசார்யரின் ம்ருதுவான  வார்தைகள்  ஸத்துக்களுக்கு ஸந்தோஷத்தை கொடுக்கும், கடினமான மனதை உடைய மதாந்தரஸ்தர்களின் வாதத்தை உடைக்கும்  திறமையையும் பெற்றது, ஆம் முன்பு நந்தகோபன் முதலிய பக்தர்களுக்கு மிகவும் ம்ருதுவான ஸ்ரீக்ருஷ்ணனின் திருவடிகள்  சகடாஸுரனை கொல்லுவதில் வஜ்ராயுதம் போல் கடினமாயிற்றல்லவா,

दर्पाविष्टकुदृष्टिदुष्टसमयोत्सादाय बोधाङ्कुरो-

द्भेदाय प्रबले कलावपि जयोत्पादाय वेदाध्वनः।

श्रीमल्लक्ष्मणपक्षरक्षकबुधामोदाय पापाटवी-

च्छेदायर्थिमरुत्तरुः विजयतां वेदान्तविद्यागुरुः।।

கர்வமுடைய குத்ருஷ்டிகளின் ஸித்தாந்தத்தை நாசம் செய்வதின் பொருட்டும், நல்லஞானத்தை உண்டுபண்ணவும் ப்ரபலமான கலியுகத்திலும் வேதமார்கத்துக்கு ஜயத்தை உண்டுபண்ணவும்

ஸ்ரீபாஷ்யகாரரின் பக்ஷத்தை ரக்ஷிக்கிற பண்டிதர்களின் ஸந்தோஷத்தின் பொருட்டும், பாபமாகிற காடை  அழிப்பதின் பொருட்டும், ஸ்ரீராமானுஜஸித்தாந்தத்தை விரும்பும் சிஷ்யர்களுக்கு கல்பவ்ருக்ஷம் போலுள்ள வேதாந்தாசார்யரான ஸ்வாமி தேசிகன் நன்கு விளங்கட்டும்.

இப்படி பலபடியாக மஹநீயர்களால் கொண்டாடப்பட்ட  ஸ்வாமி தேசிகனின் திருவடி ஸம்பந்தபாக்யத்தை பெற்ற நமக்கு  ஒப்பானவர்கள் ஸ்வாமி தேசிகனின் திருவடி ஸம்பந்தம் பெறாத பாக்யஹீநரான ஒருவரும் நமக்கு  ஸமானமானவரல்ல,ஸ்வாமி தேசிகன் ஸாதிக்கிறார் அஸ்மத்தேசிகஸம்ப்ரதாயரஹிதைரத்யாபி நாலக்ஷிதஃ நம்முடைய  ஆசார்யஸம்ப்ரதாயஸ்தர்களல்லாதவர்களினால் இன்றளவும் அடையப்படாதவன் நம் ஸ்வாமியான எம்பெருமான்  என,ஆக நாமும் பாடுவோம்

நமக்கார் நிகர் நானிலத்தே  என..

The Tamil Message of Sri.U.Ve. Dr.Satagopa Thathacharyar swamy has been translated roughly into English by STVD Community which is presented below:

U.Ve. Swamy Dr.Satagopa Thathacharyar writes :

Swamy Sri Nigamantha Maha Desikan, has got the credit of blessing everyone with 100s of Divine works in a life time. U.Ve. Sri. Uppliyappan Koil Varadhachary Sadagopan swamy has authored various translation works of Swamy Desikan for the benefit of various Devotees.

Let me present you all with some glorious aspects of Swamy Sri Desikan’s Vaibhavam along with this mail on this auspicious occasion of Swamy Sri Desikan’s Theertham ( Paramapadha Alankaram – Karthigai Pournami) :

The Following is from the work ‘Viswagunaa Dharsa Sambhu’ of Sri Asthokthvari Kachi Kadambu Kavithavithmani Sri. Venkatadhvari Swamy, who is a relative and devotee of Sri Karya Thuranthara Perumal Koil Kotikannikadhana Sri Lakshmikumara Thatha Desikan.

(The Following slokas are not the translation of entire work. But Excerpts)

Lord Sri Ranganatha of Sri Rangam, blessed Swamy Sri Desikan with the title of Vedhanthachariyar and Swamy Sri Desikan is a Kavitharkiga Simham and Sarvathanthra Swathanthrar who has crossed the sensory pleasures and a Divine incarnation who took birth at Sri Thooppul.

There was a time where, people used to debate wrongly on the union of Paramathama and Jeevathma and they falsely interpreted Sruthis from Divine Vedhas to support their arguments. But Swamy Sri Desikan completely coverd the inherit meaning of all Sruthis and the secret of Sruthis, which speak on the gretness of Sriman Narayana. Swamy Desikan removes sufferings from the life of people who take shelter at his lotus feet. He resides at Kanchi with pleasure.

It is a very rare combination to have people with the knowledge of four Vedas, Sastras, Adhyayana, Sahithya, Vinayam Achara, Bakhti, Gyana, Vairaghya, Kshama, Samarthya. No two of these qualities go hand in hand among people. But Swamy Sri Desikan is an epitome of all these divine qualities combined.

With the Mercy of Lord Sri Lakshmi Hayagriva, Swamy Sri Desikan destroyed the egoistic arrongant false claims of Agyanis. Hence no good devotee/soul will go at some other as an acharya than Swamy Desikan.

One who is knowledge will never accept anyone else as an Aacharya other than Swamy Sri Desikan. There is a very simple reason behind people following other paths other than the truest and purest path of Swamy Sri Desikan. The reason is, the worldly people praise a person, if he suggests them not to follow any Dharmanushatanas, to consume any food at any time in any manner, to enjoy life at materialistic possession and to spend a life filled with brutal enjoyment.

Also, the worldly people call somebody’s blether as Upadesa if it suggests them not to follow any righteous path and to promise them with Moksha without adhering to any Dharmas laid by Vedas and Sastras. Such is a condition of Agyanis and their preceptors. But true devoted souls which are in search of the Ultimate truth in their lifetime are coming at the Lotus Feet of Swamy Sri Desikan and they adapt and follow the customary path as shown by this Ocean of Mercy Swamy Sri Desikan.

Swamy Sri Desikan’s Mercy is like a boat that helps us to cross the Ocean of Materialistic Comforts. If Swamy Sri Desikan’s birth would have not happened, all the Thirsty Souls that look-up for Moksha would have shattered and the world would have completely forgotten the Dharma, Bakthi and Good Conduct.

Swamy Sri Desikan’s words are just like the Divine Shambuka Flower that adorns the beautiful crown of Sri Saraswathi Devi. As Lord Sri Krishna’s Feet were like Lotus Petals at Sri.Nandha Gopa and other Devotees and it was as hard as ‘Vajrayudha’ the weapon of Lord Indhra at Rakshasas like Sakadasura, So are the words of Swamy Sri Desikan to give happiness and peace to Sathpurushas and Gyanis, where the same words destroys the Agyanis, who speak against Sri Ramanuja Sampradhaya.

May Sri Desikan’s Glory stay with Victory for it is like a saviour to the path shown by Sri Bhashyakara Swamy Ramanujacharya and it provides Divine Comfort and prosperity to all Sishyas who like and adore Swamy Sri Desikan.

Swamy Sri Desikan is like the Divine Tree of ‘Kalpakavruksham’ which gives all righteous comforts to all who come at its doors.

So, we being the adherent followers of Swamy Sri Desikan, who possess all Divine Qualities of a Real Aacharya, have none as equivallent to us; for this relation of Swamy Sri Desikan’s Lotus Feet assures as doubly the Mokshobhaya as stated by Swamy Sri Desikan that, The Almighty our Beloved Lord would never be reached by people who doesnot have the Aacharya Sambandha of Sri Emberumanar. We have Swamy Sri Desikan to be the eternal residence of Sri Emberumanar. Also Swamy Sri Desikan is considered to be the re-incarnation of Sri Udayavar (“Yatheendramso Thavethyevam” – Sri Nainaracharyar)

So, Who is equally blessed like us all, in this world with the Thiruvadi Sambandham of Swamy Sri Desikan.Let us enjoy! Let us celebrate this Maha Baghyam!

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here