Sri Azhagiya Singar Brahmothsavam at Thiruvallikkeni, Lakshmi Narasimha Thirukoalam

0
971 views

On day 8 [5th July 2012] of Sri Azhagiya Singar Brahmothsavam at Thiruvallikkeni, it was Lakshmi Narasimha Thirukoalam in pallakku.

திருமங்கை மன்னன் தனது ‘திருமொழியில்’ – திருவல்லிக்கேணி     அழகியசிங்கரை இவ்வாறு மங்களாசாசனம் செய்துள்ளார்.
பள்ளியிலோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம்*
ஒள்ளியவாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பிலனாகி,*
பிள்ளையைச்சீறி வெகுண்டுதூண் புடைப்பப்mபிறையெயிற்றனல் விழிப்பேழ்வாய்
தெள்ளியசிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக்கண்டேனே.
“பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய்” – இரணியனை கொல்வதற்காக  நரசிம்ஹர், பிறை போன்ற பற்களையும், நெருப்பு பொறி கிளர்கின்ற கண்களையும் பெரிய வாயையும் உடையவனாக திருவவதாரம் பண்ணினாராம்.  திருவல்லிக்கேணி திவ்யக்ஷேத்ரத்தில் “நரசிம்ஹர்” – யோக நரசிம்ஹராக எழுந்து அருளியுள்ளார்.  உத்சவர் அதீத அழகு பொருந்திய சாந்த ஸ்வரூபி – தெள்ளிய சிங்கர்.  இவரது வடிவழகின் காரணமாக ‘அழகிய சிங்கர்’ என்றும் திருநாமம்.

இவ்வளவு வடிவழகிய பெருமாள் இன்று காலை – “லக்ஷ்மி நரசிம்ஹராக’ உபய நாச்சிமாருடன் அற்புத தரிசனம் அளித்தார்.  பல்லக்கில், சௌந்தர்யமாக காலை மடித்து அமர்ந்து, ஒரு கை அபய ஹஸ்தமாகவும், மற்றொன்று நாச்சிமாரை அரவணைத்தும் அற்புதமாக எழுந்து அருளி இருந்தார்.

 

 

 

 

Photos and Writeup : Thanks to Shri  Srinivasan Sampathkumar

Previous days’ News – Day 4: http://anudinam.org/2012/07/01/sri-azhagiya-singar-thiruvallikkeni-day-4-surya-prabhai/

Day3: http://anudinam.org/2012/07/01/azhagiya-singar-brahmothsavam-thiruvallikeni-day-3-garuda-sevai/

http://anudinam.org/2012/07/01/azhagiya-singar-brahmothsavam-thiruvallikeni-day-3-garuda-sevai/

http://anudinam.org/2012/07/02/sri-azhagiya-singar-thiruvallikkeni-%E2%80%93-day-4-nachiyar-thirukkolam/

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here