New Silver Simhasana Samarpanam To Swami Desikan At Thoopul

1
1,171 views

Samarpanam of new silver simhasanam to Swami Desikan was done in Thoopul last week, during the Thirunakshatram celebrations of Swami Desikan.

ப்ரதிச்ரவணம் மற்றும், ப்ரதி வருடம் ஸ்வாமி தேசிகனுக்கு  அவதார  உத்ஸவத்தில், ப்ரதி தினம் ஸ்வாமிக்கு மாத்யாஹ்னிகஸ்நாந க்ரமத்தில்  திருமஞ்ஜனம் நடைபெறுவது வழக்கம்.அந்த ஸமயத்தில் ஸ்வாமியை திருமஞ்ஜநவேதிகையில் எழுந்தருளச்செய்து திருமஞ்ஜநம் செய்வார்கள்.பல கோயில்களில் திருமஞ்ஜநவேதிகை தங்கத்தில் உள்ளது. நமது ஸந்நிதியில் மரத்தில் உள்ளது. பல காலமாக வெள்ளியில் செய்து ஸமர்ப்பிக்க எண்ணம்.  ஒருவாராக கடந்த வருடம் வெள்ளியில் செய்ய உபக்ரமிக்கப்பட்டது,இவ்வருடம் உத்ஸவத்துக்குள் பூர்தி செய்ய தீர்மானித்தது. ஆயினும்  த்ரவ்யம் கிடைக்காததால்  பூர்தியாகவில்லை. ஸ்வாமியின் ஸங்கல்பம் உத்தமமான புரட்டாசித்திருவோணத்தன்று எழுந்தருளும்படியாக இருந்ததுபோல். ஸ்ரீமான் திருவள்ளூர் தி..ஈச்சமபாடி. ஸ்ரீனிவாஸன் என்பவர் மிகுந்த ப்ரயாசத்துடன் அடியார்களின் ஸஹாயத்தோடு  க்ஷெ திருமஞ்ஜநவேதிகையை  பக்திபுரஸ்ஸரம் வேலூர் இணை ஆணையர் முன்னிலையில் ஸமர்ப்பித்தார்.

நமக்கு பெருமாள் போல் ஆசார்யன் ப்ரதானம் என்பதால்  பெருமாளை தினப்படி  ஸ்நாநாஸநத்தின் முன்பு  “ஸ்நாநநகாலஸ்தவயம்ப்ராப்தஃ…..……….. ஸ்நாநம் க்ரதுமர்ஹஸி” என ப்ரார்த்திக்கும் க்ரமத்தில்  ஸ்ரீதூப்புலில் स्वच्छं स्वादु सुशीतलं………..स्नानास्थानमलङ्करोतु  स  भवानह्ऩाय सानुग्रहम्. என ப்ரார்த்தித்து –கட்டியத்துடன் திருமஞ்ஜநம் செய்வது வழக்கம்.

Swami Desikan on swarna thirumanjanavedi of Sri Perarulalan on purattasi sravanam

Swami Desikan on new silver simhasanam

swamy on new silver simhasanam
Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here