The pavithrotsavam will take place for three days until 6 November 2014. Astikas nearby can make it to take part in the Pavithrotsavam and get the blessings of Perumal
108 திவ்ய தேசங்களில் ஒன்றான “திருக்கண்ணமங்கை“ திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு இன்று ஸ்ரீ ஜய வருஷம் ஐப்பசி மாதம் 18 ந் தேதி (04.10.2014) செவ்வாய்க்கிழமை “ திருப்பவித்ரோத்ஸவம்” ஆரம்பத்தை ஒட்டி காலை ஸ்ரீ பக்தவத்ஸலனுக்கு விசேஷ திருமஞ்சனமும், யாகசாலை ஆரம்பித்து யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது.
மாலை 7 மணி சுமாருக்கு ஸ்ரீதேவி, பூதேவி ஸமேத ஸ்ரீ பெரிய பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஸமேத ஸ்ரீபக்தவத்ஸலன், ஸ்ரீ அபிஷேக வல்லி, ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ஹயக்ரீவன், ஸ்ரீ நிகமாந்த மஹா தேஸிகன், ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ பக்ஷிராஜன்,ஸ்ரீ மணவாள மாமுனிகள், ஸ்ரீ ஸ்ரீநிவாசன், ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் அனைத்து ஆழ்வார்கள், சுற்றுக் கோயில் பிம்பங்களுக்கும் “திருப்பவித்ரம்“ சாற்றப்பட்டு, ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலுக்குள் ப்ரகாரப் புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து அருளைப் பெற்றனர்.
திருப்பவித்ரோத்ஸவம் இன்று முதல் 3 தின்ங்கள் 06.10.2014 வியாழக்கிழமை வரை நடைபெற உள்ளது. 06.10.2014 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு “ ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள்” தங்க கருட வாகனத்தில் ஆரோகணித்து “உதய கருட ஸேவை” நடைபெற்று “தர்சன புஷ்கரிணியில்” தீர்த்தவாரியும், விசேஷ திருமஞ்சனமும் நடைபெறும்.
The following are some of the photos taken during the occasion..
Photography : Sri Rajagopalan TSR