108 வைஷ்ணவ திவ்யதேசங்களில் 19 வது திவ்ய தேசமான நாகை சௌந்தர்ராஜப்பெருமாளுக்கு இன்று 30.11.2014 காலை முதல் பவித்ரோத்சவம் துவங்கியது.முன்னதாக சனிக்கிழமை 29.11.2014 மாலை உத்சவர் திருவடி திருமஞ்சனமும், அதனைதொடர்ந்து அனுக்ஞை மிருத்சங்கரகணம், புன்யாகவாசனம், விஸ்வக்சேன பூஜையுடன், வாஸ்து சாந்தி மற்றும் பவித்ரப்ரதிஷ்டை நடைபெற்றது.
காலை 6 மணிக்கு மேல், நித்யபூஜை, ரக்ஷாபந்தனத்துடன், யாகபேரர் கைத்தலத்தில் எழுந்தருளி, பவித்ரம் சாற்றுதல் நடைபெற்றது. அதனைதொடர்ந்து யாகசாலை பிரவேசம், த்வார பூஜை, கும்ப மண்டல பிம்ப பூஜையும், பகல் 12 மணிக்கு பூர்ணாகுதியும், மூலவர் திருவாராதனம் மற்றும் வேத பிரபந்த சாற்றுமுரையுடன் நிறைவுற்றது.
For Detail Patrikai : Nagai Sri Soundararaja Perumal Temple Jaya Varusha Pavithrotsava Pathrikai
The following are some of the photos taken during the occasion…