Thirukannamangai Swami Desikan Durmukhi Varusha Thirunakshatra Utsavam : Theertham Grahithal (Part-1)

0
235
Twitter
WhatsApp

On 2nd October 2016, Swami Desikan’s 749th Thirunakshathra Mahothsavam was commenced with a Special Thirumanjanam for Sri Hayagreevar and Swami Desikan @ 9 AM. Parayanams was begun with Veda Thodakkam.

For 9 days up to 10th Oct, daily morning thirumanjanam, seva kaalam, saatrumurai, after noon Thadhiyaaradhanm, Evening Exactly @ 5PM Swami Desikan thiruveedhi Purappaddu with Arulicheyal and Vedha Ghoshti done. After Veedhi purappadu in Sannidhi Thiruvaimozhi sevakalam with Desika Prapandam and Paduka Sahasram, Sattrumurai done.

On October 11th, 2016, 749th Thirunakshathra Mahothsavam of Swami Desikan took place at Thirukkannamangai Divya Desam, Day 10 utsavam was celebrated well in a grand manner. Vishesha Visthaara thirumanjanam was performed for Swami Desikan and Sri Hayagrivar in the morning. The water was taken from Kaveri which is 2 Km away from the temple. 54 Different Variety Prasadams are made Amuthupadi for Perumal on Swami Desikan Thirunakshatram. Veda parayanam and with Nalayira Divya Prabhanda parayanam will take place in a very magnificent manner. Lot of Bhaagavathaas will take part in Swami Nigamantha Mahadesikan Thirunakshatram at Thirukkannamangai.

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பஞ்ச க்ருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்களில் ஒன்றானதும் ஆன திருக்கண்ணமங்கை திவ்ய தேசத்தில் ஓங்கி உயர்ந்து அகண்ட திருமேனியுடன் ஆஜானுபாகுவாககோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பெரும்புறக்கடல் (ப்ருஹஸ்பஹிர் சிந்துநாத்) என்று போற்றப்படும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில், வடவண்டை ப்ரகாரத்தில் ஸ்ரீ ஹயக்ரீவருடன் தனிச் சந்நிதி கொண்டு எழுந்தருளியிருக்கும் நம் ஆச்சார்யன் ஸ்ரீ நிகமாந்த மஹா தேஸிகனுக்கு 749 வது திருநக்ஷத்ர மஹோத்ஸவம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 2, 2016 ஸ்ரீ துர்முகி வருஷம் புரட்டாசி மாதம் 16 ந்தேதி ஹஸ்த நக்ஷத்ரத்தில் திருநக்ஷத்ர மஹோத்ஸவம் தொடங்கி,

அன்று காலை 9 மணிக்கு ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ தேஸிகனுக்கு விசேஷ திருமஞ்சனம் ஆகி, வேத கோஷத்துடன், 4000, வேதத் தொடக்கம் ஆகி, தினசரி காலை, மாலை சேவாகாலம், சாற்றுமுறை, மதியம் ததியாராதனை, மாலை 5 மணிக்கு ஆச்சார்யன் அத்யாபக, வேத கோஷ்டியுடன் ஸ்வாமி தேஸிகனுக்காக ப்ரத்யேகமாக செய்யப்பட்ட “ நூதன” திருப்படிச்சட்டத்தில் திருவீதிப் புறப்பாடு, பின் சந்நிதி உள் ஏளியதும் திருவாய்மொழி சேவாகாலம் சாற்றுமுறை சிறப்பாக நடைபெறும்.

துர்முகி வருஷம் புரட்டாசி 25ந் தேதி செவ்வாய்க்கிழமை திருவோண நன்நாளில் காலை 7 மணி சுமாருக்கு2 மைல் தொலைவில் உள்ள காவிரியின் கிளை நதியான “வெட்டாற்றில்” இருந்து புனித நீர் யானை மீதும்மற்றும் இரண்டு ப்ரதான கடங்கள் தவிர 44 கடங்களில், 44 ஸ்வாமிகளால் எடுத்து குடை தீவட்டி, மேள வாத்ய கோஷ்டியுடன், வெடி, வாண வேடிக்கையுடன், வெட்டாற்றிலிருந்து வந்து, திருக்கண்ணமங்கை திருவீதி முழுவதும் வலம் வந்து சந்நிதி முன் எழுந்தருளப் பண்ணி ஸ்தபனம் செய்யப்பட்டு,

ஸ்வாமிகளுக்கு சிறிது நேர ஓய்வுக்குப் பின் ததியாராதனை 10 மணிக்கு முடிந்து, சுமார் 11 மணிக்கு ஸ்ரீ ஹயக்ரீவன், ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகனுக்கு வெளி மண்டபத்தில் விஸ்தார திருமஞ்சனம் மதியம் 2.30மணி வரை விசேஷமாக நடைபெற்றது. ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேகவல்லி தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று, உடன் ஸ்ரீ ஹயக்ரீவரை சந்நிதி உள் எழுந்தருளப் பண்ணிவிட்டு, ஸ்ரீ தேசிகனுக்கு “கங்கையினும் புனிதமான தர்ஸ புஷ்கரிணி”யில்அபவிருதம்(தீர்த்தவாரி) ஆகி, உடனே விசேஷ அலங்காரம் செய்விக்கப்பட்டு ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சந்நிதிகளுக்கு புறப்பாடு ஆகி, ஸ்ரீ பாஷ்யகாரர்,ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சந்நிதிகளில் மங்களா சாசனம்நடைபெற்றது.

பின் ஸ்ரீ ஹயக்ரீவர் மங்களாசாசனம் நடைபெற்று, அதன் பின் சுமார் 6.30 மணியளவில் திருப்பாவை சாற்றுமுறை ஆனது.

இரவு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், விஜயதசமி ஆனதால் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, அம்பு போட்டு உள்ளே எழுந்தருளி, மறு அலங்காரம் ஆகி, 10.30 மணிக்கு ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் விசேஷ புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீ தேசிகன் ஸந்நிதிக்கு எழுந்தருளுவதற்கான புறப்பாடு ஆகி, விசேஷ ப்ரம்மாண்ட வெடி, வாண வேடிக்கை, விசேஷ நாதஸ்வரக் கச்சேரியுடன் உள் ப்ரகாரத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலன் எழுந்தருளி ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி அருகில் எழுந்தருளியவுடன், ஸ்ரீ தேசிகன் வேத கோஷத்துடன், பஞ்சாயி சொல்லி பூர்ண கும்பம் சமர்ப்பிக்கப்பட்டு, பட்டு, பரிவட்டம், மாலை இத்யாதிகளுடன் எதிர்கொண்டழைத்து பெருமாள் ஸ்ரீ தேசிகன் சந்நிதியை நோக்கி திரும்பி ஏளியவுடன்,பட்டு பரிவட்டங்கள் சாற்றி ஆரத்தி ஆனதும், தஸாவதார ஸ்லோகம் 13ம் ஒவ்வொரு ஸ்லோகமாக சேவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒவ்வொரு தளிகை, அதாவது சுமார் 25 KG சுக்கு ஏலம் கலந்த நாட்டுச் சர்க்கரை, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாராபருப்பு, முந்திரி, உலர் திராக்ஷை,பேரீச்சை, டைமன் கல்கண்டு, குண்டு சீனா கல்கண்டு, குழவு ஜீனி, தேங்காய் பூ, கொப்பரை தேங்காய் பல், அக்ரூட் பருப்பு, அத்திப் பழம், duty fruity, முதலிய பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக நைவேத்யம்,கற்பூரம், காளாஞ்சி செய்விக்கப்பட்டு, பின் அனைத்து த்ரவியங்களையும் ஒன்றாக கலந்து சேவிக்க வந்திருக்கும் அனைத்து சேவார்த்திகளுக்கும் சந்தனம், காளாஞ்சியுடன் இந்த ப்ரசாதம் விநியோகிக்கப்பட்டது.

ப்ரசாத வினியோகம் ஆனதும் வழக்கப்படி நித்யபடி காளாஞ்சி மர்யாதை ஸ்ரீ தேஸிகனுக்கு ஆகி, ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஸ்ரீ தேசிகன் சந்நிதிக்குள் எழுந்தருளினார்.

மறு அலங்காரம் ஆகி, நவநீதம் தளிகை சமர்ப்பிக்கப் பட்டு திரை திறந்து, பின் நித்யானுசந்தான திருவாராதனம் கோஷ்டி நடைபெற்று. அதன் பின் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஸ்ரீ தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளியபின் பெருமாள் முன் சேவிப்பதற்காக 4000 ல் நிறுத்தி வைக்கப்பட்ட 400 பாசுரங்கள் சேவிப்பதற்கு தொடக்கத் தளிகை அமுது செய்து, தொடக்கம் ஆகி 400 பாசுரங்கள் அதிகாலை 6.15 மணி வரை சேவிக்கப்பட்டது. மறுநாள் 12.10.2016 காலை 9 மணியளவில் மடப்பள்ளியிலிருந்து காஞ்சீபுரம் இட்லி, வடை, தோசை, ஜீரா முதலிய தளிகைகளுடன் 54 வகை பக்ஷணங்கள் குடை தீவட்டி இத்யாதி மர்யாதைகளுடன் உள் ப்ரகாரத்தில் ப்ரதக்ஷணமாக எடுத்து வரப்பட்டு ஸ்ரீ தேசிகன் சந்நிதியில் உள்ள ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை சமர்ப்பிக்கப்பட்டு அனைத்து தளிகைகளும் கண்டருளப் பட்டு பெரிய சாற்றுமுறை சுமார் 2 மணி நேரம் நடைபெற்று, அதன் பின் பெருமாள்,ஆழ்வார்கள், ஆச்சார்யன், ஆஸ்ரம, ஸ்ரீ மடத்து ஸம்பாவனைகள், திருக்கோயில் அர்ச்சகர்கள், ஸந்நிதி கைங்கர்யபரர்கள் மற்றும் கோஷ்டி வேத பாராயண, அத்யாபக ஸ்வாமிகள் சம்பாவனைகள் ஆனதும் தீர்த்த கோஷ்டி ஆனது. அனைத்து ப்ரசாதங்களும் வந்திருந்த 100க்கணக்கான ஸேவார்த்திகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. ஸ்ரீ ரங்கநாத பாதுகா, ஸம்பாதகர், ஸ்ரீ உ.வே. N.ராஜகோபாலாச்சார் ஸ்வாமியின் அற்புத உபன்யாசம் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.

அதன் பின் சந்நிதி மர்யாதை ஆகி சுமார் மதியம் 2 மணியளவில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் பனி முக்காட்டு சேவையுடன் ஆஸ்தானத்து எழுந்தருளினார். ஸ்ரீ தேசிகன் விடையாற்றி புறப்பாடு நடைபெற்றது. இரவு 8 மணிக்கு விடையாற்றி உத்ஸவத்துடன் ஆச்சார்யனின் 749 வது திருநக்ஷத்ர மஹோத்ஸவம் இனிதே முடிவடைந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து சேவித்து ஆச்சார்யன் மற்றும் ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.

These are some of the photos taken during the occasion…

திருக்கண்ணமங்கை பாசுரம்.

பெரும்புறக்கடலை அடலேற்றினைப்*

பெண்ணை யானை* /எண்ணில் முனிவர்க்கருள்
தருந்தவத்தை /முத்தின் திரட்கோவையை* பத்தராவியை நித்திலத்
தொத்தினை* /அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை*/
அமுதம் பொதியின் சுவைக் கரும்பினை*/
கனியைச் சென்று நாடிக்*
கண்ணமங்கையுட் கண்டு கொண்டேனே*.

மெய்ந்நலத் தவத்தைத் திவத்தைத் தரும்*
மெய்யைப் பொய்யினைக் கையில் ஓர்’சங்குடை*
மைந்நிறக்கடலைக் கடல் வண்ணனை*/ மாலை-
ஆலிலைப் பள்ளி கொள் மாயனை*/
நென்னலைப் பகலை இற்றை நாளினை*
நாளயாய் வரும் திங்களை ஆண்டினை*
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக்*
கண்ண மங்கையுட் கண்டு கொண்டேனே*.

எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை*
வாசவார் குழலாள் மலைமங்கை தன்-
பங்கனை* பங்கில் வைத்து உகந்தான் தன்னை*
பான்மையைப் பனிமா மதியம் தவழ்*
மங்குலைச் சுடரை வடமாமலை-
உச்சியை* நச்சி நாம் வணங்கப்படும்-
கங்குலை* பகலைச் சென்று நாடிக்*
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*.

பேய்முலைத்தலை நஞ்சுண்ட பிள்ளையைத்*
தெள்ளியார் வணங்கப்படும் தேவனை*
மாயனை மதிள் கோவலிடைகழி மைந்தனை*
அன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை*
இலங்கும் சுடர்ச் சோதியை*
எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை*
காசினை மணியைச் சென்று நாடில்*
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே.

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை*
இம்மையை மறுமைக்கு மருந்தினை*
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனைக்*
கையிலாழி ஒன்றேந்திய கூற்றினை*
குரு மாமணிக் குன்றினை*
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை*
காற்றினைப் புனலைச் சென்று நாடிக்*
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே.

துப்பனைத் துரங்கம் படச்சீறிய தோன்றலை*
சுடர் வான் கலன் பெய்த்து ஓர் செப்பினை*
திருமங்கை மணாளனைத்*
தேவனைத் திகழும் பவளத்தொளி ஒப்பனை*
உலகேழினை ஊழியை*
ஆழியேந்திய கையனை அந்தணர் கற்பினை*
கழுநீர் மலரும் வயல்*
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத்*
தேவதேவனை மூவரில் முன்னிய விருத்தனை*
விளங்கும் சுடர்ச் சோதியை*
விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய அருத்தனை*
அரியைப் பரிகூறிய அப்பனை*
அப்பிலார் அழலாய் நின்ற கருத்தனை*
களி வண்டறையும் பொழில்*
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே.*

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக்*
கன்று வீசிய ஈசனை* பேய்மகள் –
துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத்*
தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய-
நஞ்சினை* அமுதத்தினை நாதனை*
நச்சுவார் உச்சிமோல் நிற்கும் நம்பியை*
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சினைக்*
கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே*

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப்*
பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற-
விண்ணினை* விளங்கும் சுடர்ச் சோதியை*
வேள்வியை விளக்கினொளி தன்னை*
மண்ணினை மலையை அலை நீரினை*
மாலை மா மதியை மறையோர் தங்கள்-
கண்ணினை*/ கண்கள் ஆரளவும் நின்று-
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று*
காதலால் கலி கன்றி உரைசெய்த*
வண்ண ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றிவை*
வல்லராய் உரைப்பார் மதியம் தவழ்*
விண்ணில் விண்ணவராய் மகிழ் வெய்துவர்*
மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றேந்திய-
கண்ணா!* /நின் தனக்கும் குறிப்பாகில்-
கற்கலாம்* கவியின் பொருள் தானே*-
திருமங்கை ஆழ்வார்.

*****************

கருத்தினால் வாக்கினால் நான்மறையும் காணா

ஒருத்தனை நீ நெஞ்சே உணரில் – பெருத்த முகில்

வண்ணம் அங்கை, கண், கால், வனசம்; திருவரங்கம்

கண்ணமங்கை ஊர் என்று காண். – {பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்-108 திருப்பதி அந்தாதி- பாசுரம்34.}

Writeup & Photography : Sri Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here