Today December 25th 2020; Sarvari Margazhi Ashwini, Sarva Vaikunta Mukkodi Ekadasi, was celebrated at Sri Ranganathawamy Divya Desam, Srirangam. Namperumal...
சித்ராபௌர்ணமீ தினம் பெருமாள் நாச்சிமாருடன் ஐய்யங்கார்குளத்தில் திருமஞ்சனம் கண்டருளி ஸ்ரீகார்யதுரந்தரராய் இருந்த .ஸ்ரீலக்ஷ்மீகுமாரதாததேசிகன் நிர்மித்த நடவாபியில் பத்தி உலாத்தல் மற்றும் நிவேதனம் கண்டருளி ஸ்ரீதேசிகஸ்தோத்ரபாடகோஷ்டியுடன் பாலாற்றுக்கு எழுந்தருளி திருமஞ்சனம் நிவேதனம் கண்டருளி கோயிலுக்கு எழுந்தருளும் வழியில் ஸ்ரீதூப்புலில் ஸ்வாமிக்கு மாலை ஸ்ரீசடாரி ப்ரஸாதித்து எழுந்தருள்வார், இதின் விசேஷத்தை சிறிது நாம் அனுபவிப்போம்,
ப்ரஹ்மாசெய்தஅயமேத யாகத்தில் நம்மத்திகிரித்திருமால் அவதரித்தார், அவரை அநேககாலம் ஆராதித்தும் ப்ரஹ்மாவுக்கு ஸத்யலோகம் செல்ல மநம் வராமல் ஆராதிக்க, எம்பெருமான் அவரை ஸத்யலோகம் சென்றுதன்னுடயதான ஸ்ருஷ்டிகார்யத்தை செய்ய நியமித்து ப்ரதிவருடம் சைத்ரமாதத்தில் சதுர்தசியன்று திருமலையில் -ஹஸ்திகிரியில் திருவாராதனம் செய்ய நியமித்தார்,மேலும் சித்ராபௌர்ணமீதினமும் பகலும் இரவும் தன்னை ஆராதிக்க நியமித்தார், ஆனபடியாலேயே சித்திரைமாதம் ஹஸ்தநக்ஷத்ரத்தில் விசேஷ ஆராதனம் சாத்துமறை ஸ்தோத்ரபாடகோஷ்டீ திருமலையில் நடைபெறுகிறது.
பௌர்ணமீ தினம் பாலாற்றில் ப்ரஹ்மாராதனம் செய்கிற தாத்பர்யத்தில் திருமஞ்சனம் நடைபெற்று திருசாதமும் நிவேதனம் செய்யப்படுகிறது.திருசாதம் என்பது பெருமாள் இரவில் பர்யங்காசனத்தில் அமுது செய்யும் ப்ரஸாதமகும், இப்ரசாதம் மற்றநாள்களில் திருக்கோயிலில் மாத்ரம் ஸமர்பித்து உடன் திருகாப்பும் ஸமர்பிப்பார்கள்.பிறகு ஸேவை கிடையாது., ஆனால் சித்ராபௌர்ணமீதினம் இப்ரசாதத்தை பாலாற்றிலேயே நிவேதனம் செய்வது வழக்கம், காரணம் ப்ரஹ்மா பூர்தியாக திருவாராதனம் செய்யவேண்டுமென்பதால் பர்யங்காஸனமும் ஸமர்ப்பிக்கவேணும், ஆனபடியால் அதை இங்கேயே ஸமர்ப்பி்த்துவிடுவார்கள், விசேஷதினங்களில் பர்யங்காசனத்தில் விசேஷதிருவாபாரணங்களை களைந்து ஸுகோசிதமாக திருமார்புநாச்சியார், யஞ்ஞோபவீதம் அரைநான்,மற்றும் விழுதிகாப்பு, மிதமான புஷ்பங்கள் என ஸமர்ப்பிக்கும் விதத்தில் இன்றும் விசேஷதிருவாபரணங்களை களைந்து சயனோசிததிருவாபரணங்களுடன் திருசாதத்தை நிவேதனநம் செய்வார்கள், சிறிதுகாலம் காலம் கழித்து பெருமாள் கோவிலுக்கு புறப்படுவார், வழியில் ஸ்ரீதூப்புலில் ஸ்வாமிதேசிகன் பெருமாளை ஸேவிக்க காத்திருப்பார், ஸ்ரீஸ்வாமி தேசிகன் தன்னுடய விபவகாலத்தில் பெருமாளை காலையில் மங்களாசாஸனம் செய்ததை குறிப்பிடும் விதத்தில்
வரத , விசேஷதிருவாபரணங்கள் இல்லாததும் கஸ்தூரி முதலான ஸுகந்தவஸ்துக்களோடு கூடியதுமான உம்முடய பச்சைமாமலைபோல் மேனியை தன்யர்கள் ஸேவிக்கிறார்கள், காலையில் திருவனந்தாழ்வானிடத்தில் நின்றும் திருப்பள்ளி உணர்ந்த தேவரீர், இரவில் பர்யங்கத்தில் பெரியபிராட்டியின் ஆலிங்கனத்தால் ஏற்பட்ட வளைத்தழும்புகளுடன் கூடிய திருக்கழுத்துடன் எனது மனதில் நிலைகொள்ளவேணும் என ப்ரார்த்தித்தார், இன்று ஸ்வாமி தேசிகன் அர்சையானநிலைில் காலையில் திருமலைக்கு செல்ல அவகாசமில்லை, ஆதலால் நம்மத்திகிரித்திருமால் ஸ்வாமியின் ப்ரார்த்தனையை ஸ்மரித்து இன்று பாலாற்றில் பர்யங்காசனத்தில் நின்றும் எழுந்தவுடன் பர்யங்காசனத்தில் சாத்திய புஷ்பமாலைகளுடன் ஸ்வாமிக்கு ஸேவை ஸாதிக்க ஸ்ரீதூப்புலுக்கு எழுந்தருளி தான் பர்யங்த்தில் சாத்திய மாலையை ஸ்ரீசடாரியுடன் ஸவாமிக்கு அனு்ரஹித்து ஸ்ரீதேசிகன் ஸாதி்த்த ஸ்தோத்ரத்தை திருச்செவி ஸாய்த்து வேறு புஷ்பத்தை ஸ்வீகரியாமலேயே கோயிலுக்கு எழுந்தருள்வார், நம்மத்திகிரித்திருமாலுக்கு ஸ்வாமி தேசிகனிடம் உள்ள அபிமானம் வேறு ஒருவரிடமும் கிடையாது. ஆக மாலுகந்த ஆசிரியன் நம் வேதாந்தவாசிரியனே.நம்மத்திகிரித்திருமால் வேண்டித்தெல்லாம் தரும் வள்ளல், வேரு யாரும் இந்த ஸேவையை ப்ரார்த்திக்கவில்லை. ஸ்வாமி ஒருவரே ப்ரார்த்திக்க அவருக்கு மட்டும்
ஸேவை ஸாதிக்க நாம் ஸ்ரீதேசிகனடியாரகளானபடியால் நமக்கும் இதை ஸேவிக்க பாக்யம் கிட்டியது ஸ்வாமிதேசிகன் அனுபவித்த விதம் ஸேவைஸாதிக்கும் உத்ஸவம் சித்ராபௌர்ணமீ உத்ஸவம், இத்தனைகாலம் இந்த மஹோத்ஸவத்தை ஸேவிக்காதவர்கள் வரும் வருடங்களில் ஸேவித்து தன்யர்களாகலாம்,
I never knew of this publication, till somebody called me from Kanchipuram & sent me the link by SMS. Well done.