Aadhiyugaththu Ayan KandidaNinra Arul-Varadhar

1
1,031 views
Vedagoshty

மண்மகளார்கு அலங்காரமான மதிள்கச்சியில் நம்மத்தகிரித்திருமாலுக்கு சித்திரைமாதத்தில்அநேக   விசேஷ உத்ஸவங்கள் நடைபெறுகின்றன.அவைகள், ஹஸ்தத்ன்று திருவவதார உத்ஸவம், சித்ராபௌர்ணமீதினம் நடவாபீ  உத்ஸவம் , மறுதினம் தோட்ட உத்ஸவம் என, திருவவதார உ்த்ஸவத்தன்று அதிகாலை திருமலையில் வேதப்ரபந்தசாத்துமறை ஸ்தோத்ரபாடகோஷ்டீ நடைபெறுவது விசேஷம்,

சித்ராபௌர்ணமீ தினம் பெருமாள் நாச்சிமாருடன் ஐய்யங்கார்குளத்தில்  திருமஞ்சனம் கண்டருளி ஸ்ரீகார்யதுரந்தரராய் இருந்த .ஸ்ரீலக்ஷ்மீகுமாரதாததேசிகன் நிர்மித்த நடவாபியில் பத்தி உலாத்தல்  மற்றும் நிவேதனம் கண்டருளி  ஸ்ரீதேசிகஸ்தோத்ரபாடகோஷ்டியுடன் பாலாற்றுக்கு எழுந்தருளி திருமஞ்சனம் நிவேதனம் கண்டருளி கோயிலுக்கு எழுந்தருளும் வழியில் ஸ்ரீதூப்புலில் ஸ்வாமிக்கு மாலை ஸ்ரீசடாரி ப்ரஸாதித்து எழுந்தருள்வார், இதின் விசேஷத்தை  சிறிது நாம் அனுபவிப்போம்,

Also read related news about this event: http://anudinam.org/2012/05/08/thotta-uthsavam-at-kanchipuram/

ப்ராஹ்மபுராணத்தில் ஸ்ரீஹஸ்திகிரிமாஹாத்ம்யத்தில் ….

சைத்ரேமாஸே ஸிதே பக்ஷே சதுர்தச்யாமநந்யதீஃ
மாமேவாப்யர்சயாத்ரத்வம் வேதிமத்யே வ்யவஸ்திதம்.
சைத்ரேமாஸே ஸிதே பக்ஷே சதுர்தச்யாமிஹாகதஃ
பௌணமாஸ்யாம் து  மந்மத்யா மாமுபாஸ்வ திவாநிசம்.
விசேஷேண மயாதத்தம் ததேவ மமபூஜநம்..
ஸமாகத்யேஹ லோகேத்வம் தத்திநே பூஜயஸ்வ மாம்,

Stotrpatagoshty

ப்ரஹ்மாசெய்தஅயமேத யாகத்தில் நம்மத்திகிரித்திருமால்  அவதரித்தார், அவரை அநேககாலம் ஆராதித்தும் ப்ரஹ்மாவுக்கு ஸத்யலோகம் செல்ல மநம் வராமல் ஆராதிக்க, எம்பெருமான் அவரை ஸத்யலோகம் சென்றுதன்னுடயதான ஸ்ருஷ்டிகார்யத்தை  செய்ய நியமித்து ப்ரதிவருடம் சைத்ரமாதத்தில் சதுர்தசியன்று திருமலையில் -ஹஸ்திகிரியில் திருவாராதனம் செய்ய நியமித்தார்,மேலும் சித்ராபௌர்ணமீதினமும் பகலும் இரவும் தன்னை ஆராதிக்க நியமித்தார், ஆனபடியாலேயே  சித்திரைமாதம்  ஹஸ்தநக்ஷத்ரத்தில்  விசேஷ ஆராதனம் சாத்துமறை ஸ்தோத்ரபாடகோஷ்டீ திருமலையில் நடைபெறுகிறது.

பௌர்ணமீ தினம் பாலாற்றில் ப்ரஹ்மாராதனம் செய்கிற தாத்பர்யத்தில்   திருமஞ்சனம் நடைபெற்று திருசாதமும் நிவேதனம்  செய்யப்படுகிறது.திருசாதம்  என்பது பெருமாள் இரவில் பர்யங்காசனத்தில்   அமுது செய்யும் ப்ரஸாதமகும், இப்ரசாதம்  மற்றநாள்களில் திருக்கோயிலில் மாத்ரம்  ஸமர்பித்து உடன் திருகாப்பும் ஸமர்பிப்பார்கள்.பிறகு ஸேவை கிடையாது., ஆனால் சித்ராபௌர்ணமீதினம் இப்ரசாதத்தை பாலாற்றிலேயே நிவேதனம் செய்வது வழக்கம், காரணம் ப்ரஹ்மா  பூர்தியாக திருவாராதனம்  செய்யவேண்டுமென்பதால்  பர்யங்காஸனமும் ஸமர்ப்பிக்கவேணும், ஆனபடியால் அதை இங்கேயே  ஸமர்ப்பி்த்துவிடுவார்கள், விசேஷதினங்களில்  பர்யங்காசனத்தில்  விசேஷதிருவாபாரணங்களை களைந்து  ஸுகோசிதமாக திருமார்புநாச்சியார், யஞ்ஞோபவீதம் அரைநான்,மற்றும் விழுதிகாப்பு, மிதமான புஷ்பங்கள் என ஸமர்ப்பிக்கும் விதத்தில் இன்றும்  விசேஷதிருவாபரணங்களை களைந்து சயனோசிததிருவாபரணங்களுடன் திருசாதத்தை  நிவேதனநம் செய்வார்கள், சிறிதுகாலம் காலம் கழித்து பெருமாள் கோவிலுக்கு புறப்படுவார், வழியில்  ஸ்ரீதூப்புலில் ஸ்வாமிதேசிகன்  பெருமாளை ஸேவிக்க காத்திருப்பார், ஸ்ரீஸ்வாமி தேசிகன் தன்னுடய விபவகாலத்தில்  பெருமாளை காலையில்  மங்களாசாஸனம் செய்ததை குறிப்பிடும் விதத்தில்

வரத தவ விலோயந்தி தன்யாஃ மரகதபூதரமாத்ரகாயமானம்.
வ்யபகதபரிகர்மவாரவாணம் ம்ருகமதபங்கவிசேஷநீலமங்கம்,

அநிப்ருதபரிரம்பைராஹிதாமிந்திராயாஃ
கநகவலயமுத்ராம் கண்டபாகே ததாநஃ

After Maryadai

பணிபதிசயநீயாதுத்திதஸ்தவம் ப்ரபாதே
வரத ஸததமந்தர்மாநஸம் ஸந்நிதேயாஃ 

வரத , விசேஷதிருவாபரணங்கள் இல்லாததும் கஸ்தூரி முதலான ஸுகந்தவஸ்துக்களோடு கூடியதுமான உம்முடய பச்சைமாமலைபோல் மேனியை தன்யர்கள் ஸேவிக்கிறார்கள், காலையில்  திருவனந்தாழ்வானிடத்தில்  நின்றும்  திருப்பள்ளி உணர்ந்த தேவரீர்,  இரவில் பர்யங்கத்தில்  பெரியபிராட்டியின் ஆலிங்கனத்தால் ஏற்பட்ட வளைத்தழும்புகளுடன் கூடிய திருக்கழுத்துடன் எனது மனதில் நிலைகொள்ளவேணும் என ப்ரார்த்தித்தார், இன்று ஸ்வாமி தேசிகன் அர்சையானநிலைில் காலையில்  திருமலைக்கு செல்ல அவகாசமில்லை, ஆதலால் நம்மத்திகிரித்திருமால்  ஸ்வாமியின் ப்ரார்த்தனையை ஸ்மரித்து இன்று பாலாற்றில் பர்யங்காசனத்தில் நின்றும் எழுந்தவுடன்   பர்யங்காசனத்தில் சாத்திய புஷ்பமாலைகளுடன் ஸ்வாமிக்கு ஸேவை ஸாதிக்க ஸ்ரீதூப்புலுக்கு எழுந்தருளி தான் பர்யங்த்தில்  சாத்திய மாலையை ஸ்ரீசடாரியுடன் ஸவாமிக்கு அனு்ரஹித்து ஸ்ரீதேசிகன் ஸாதி்த்த ஸ்தோத்ரத்தை திருச்செவி ஸாய்த்து  வேறு புஷ்பத்தை ஸ்வீகரியாமலேயே கோயிலுக்கு எழுந்தருள்வார், நம்மத்திகிரித்திருமாலுக்கு ஸ்வாமி தேசிகனிடம் உள்ள அபிமானம் வேறு ஒருவரிடமும் கிடையாது. ஆக மாலுகந்த  ஆசிரியன் நம் வேதாந்தவாசிரியனே.நம்மத்திகிரித்திருமால் வேண்டித்தெல்லாம் தரும் வள்ளல், வேரு யாரும்  இந்த ஸேவையை ப்ரார்த்திக்கவில்லை. ஸ்வாமி ஒருவரே ப்ரார்த்திக்க  அவருக்கு மட்டும்
ஸேவை ஸாதிக்க நாம் ஸ்ரீதேசிகனடியாரகளானபடியால்  நமக்கும்  இதை ஸேவிக்க  பாக்யம் கிட்டியது ஸ்வாமிதேசிகன்  அனுபவித்த  விதம் ஸேவைஸாதிக்கும் உத்ஸவம் சித்ராபௌர்ணமீ உத்ஸவம், இத்தனைகாலம் இந்த மஹோத்ஸவத்தை ஸேவிக்காதவர்கள் வரும் வருடங்களில் ஸேவித்து தன்யர்களாகலாம்,

இவ்வருடம் புதியதாக நாச்சிமார்களுக்கு ஸ்வர்ணவளைகளை ஸ்வாமிதேசிகனின் அடியார்  ஒருவர் ஸமர்பிக்க, புதியதான அந்த திருவாபரணத்தின்  தழும்புடன் நம்மத்திகிரித்திருமால்  ஸேவைஸாதிக்க ஸ்வாமிதேசிகன் மிகமகிழ்ந்து ஸமர்பித்த தன்னடியாரை குளிர கடாக்ஷித்து அனுக்ரஹித்தாயிற்று.

தோட்ட உத்ஸவத்தன்றும்  ஸ்தோத்ரபாடகோஷ்டீ விசேஷம்,

தன்யாஃ பச்யந்து மே நாதம் வரதம் பக்தவத்ஸலம்.

Written by: Dr Satakopa Thathachar from Thooppul / Kaanchi

பர்யங்கபுஷ்ப்பத்தடன்

Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here