Upanyasam Titbits

2
886 views

ஸ்ரீரங்கத்தில் புறப்பாட்டின் போது எந்த வீட்டிலும் நின்று மரியாதையை வங்கிக் கொள்வது இல்லை. சடாரியும் கிடையாது.

6 தடவை போற்றி என்று ஆண்டாள் ஏன் கூறினாள் . நாக்குக்கு எப்படி அறுசுவை முக்யமோ அது போன்று தான்.

ஆழ்வார்களில் ஒரே ஒரு ஆழ்வார் வாகனம் வைத்துக் கொண்டவர் என்றால் அவர் திருப்பாணாழ்வார் ஒருவரே.

சடகோப அந்தாதியை முதலில் எழுதினார் கம்பர். பிறகே இராமாயணம் சமிர்க்கப்பட்டது.

ஒருத்தி மகனாய் பிறந்து என்று ஏன் கூறினாள் ஆண்டாள். தேவகிக்கு எட்டாவது மகனாக கர்ப வாசத்தால் பிறந்ததால் என்று அறிக.

வெந்நீர் போட்டு தான் திருமஞ்சனம். எண்பத்து ஒன்று கலசத்தில் தான் ஸ்ரீரங்கத்தில் திருமஞ்சனம்.

பல்லாண்டு என்று ஆரம்பித்து பல்லாண்டே என்று முடிக்கிறார் பெரியாழ்வார்

அப்பாஞ்ச சன்யம் என்று ஏன் கூறினார் என்றால் கம்சனுக்கு பயந்து. இப்பாஞ்ச சன்யம் என்று பாடி இருந்தால் அவன் வந்து கண்ணனை ஏதாவது செய்து விடுவனோ என்பதால் “அப்பாஞ்ச” சன்யம் என்று கூறினார் என்று அறிக.

தம்பி ஆன விபீஷணன் சொன்னதை கேட்காத இடத்திலிருந்து தம்பி சொல் கேட்கும் (இராமன்) இடத்திற்கு வந்தான் .

தானத்தில் சிறந்தது அம்பரம் , சோறு , தண்ணீர். இந்த மூன்றையும் செய்தவன் கண்ணன். வஸ்த்ர தானம் பாஞ்சாலிக்காக தண்ணீர் தானம் குதிரைகளுக்காக சோறு தானம் – முனிவர்களின் மனைவி மார்கள் மூலம். (நண்பர்கள் பசியாக இருக்கும் போது அவர்களுக்கு கிடைத்தது)

ராமரும் லக்ஷ்மணனும் உட்கார்ந்து இருந்தபோது அங்கு வந்த சுக்ரீவன் லக்ஷ்மணனை பார்க்காமல் இராமனிடமே பேசினதால் கோப முற்ற ராமர் அவனுக்கு பாடம் கற்பிக்கவே ஒரு நாடகம் நடத்தினார்.
வாலியும் சுக்ரீவனும் சண்டை செய்த போது ஏன் இருவர்க்கும் ஒரு முகம் என்று சொல்லவில்லை என்னிடம் என்று சுக்ரீவனை கேட்டார் ராமன். இது ஒரு பொய் என்னை அமர்த்தி வைத்து என் பாகவதனை அபசார படுத்தினதால் இந்த நாடகம் என்று அறிக. பிறகு (மறு முறை வாலி-சுக்ரீவ போரிற்கு )அடையாளத்திற்கு லக்ஷ்மணர் கரத்தினால் சுக்ரீவனுக்கு மாலையை அணிவித்து அனுப்பி வைத்ததன் மூலம் சுக்ரீவன் பிராயச்சித்தம் செய்ய வைத்தார். இன்றும் ஹம்பியில் சுக்ரீவன் ராமன் சந்தித்த குகையை காணலாம்.

பலராமன் தீர்த்த யாத்திரை போன போது பாரத யுத்தம் நடந்தது. பலராமன் இருந்தால் தன காரியத்தை ஆச்ரியிக்க மாட்டான் என்று தெரியும். அவர்க்கு மரியாதையை கொடுக்கவே இப்படி செய்தான் என்று அறிக.

உபன்யாசம் உட்கார்ந்து சொல்லும் ஆசனத்துக்கு வியாசர் பீடம் என்று அறிக.

திருநாராயண புரத்தில் முதலில் திருத் துழாய் பிரசாதம் முதலில் பிறகு மற்றவை.

திருவட்டாறு என்கிற (மலைநாட்டு) திவ்யதேசத்தில் பத்மநாபனுக்கு நாபிக் கமலம் இல்லை. மேலே பிரம்மாவும் இல்லை, மூலமூர்த்தியின் முகத்தில் மாலை நேரத்தில் சூரியன் ஒளியை காணலாம். வேறு எந்த திவ்யதேசத்திலும் இப்படி கிடையாது. இது த்ரேதா யுகத்தது என்று பெரியோர் கூறுவார்.

பெரிய நம்பியிடம் பதினெட்டு முறை சென்றார் என்பது எல்லோரும் அறிந்ததே. கடைசியில் பெரியநம்பி ஒரு சீடரை அழைத்து தான் ஒருவரே வருமாறு கூறினார். உடையவரோ இருவரை அழைத்துச் சென்றார் (முதலி ஆண்டான் ,கூரத்தழ்வான்) ஏன் இவர்களை அழைத்து வந்தீர் என்று கேட்டபோது ஒருவர் தன் த்ரிதண்டம், மற்றவர் தன் பவித்ரம் என்றாராம்.அவர் சாதுர்யத்தை வியந்து, தான் ரஹஸ்யங்களை கூறப் போகிறேன், வேறு எவருக்கும் உபதேசிக்கலாகாது என்று ஆணை இட்டார்.
ஆனால் நடந்தது எல்லோரும் அறிந்தது.அவரை பெரியநம்பி கோபத்தோடு கூறியதும் யாவரும் அறிந்ததே. தான் செய்தது தவறு என்று கூறாமல் உடையவர் அருளிய சுலோகம் இதுதான்.

“யதிஷ்யே ஏக ஏவாஹம் நரகே குரு பாதகாத்
சர்வே கச்சந்து பாவதாம் க்ருபயா பரமம் பதம் ”

இதைக் கேட்ட நம்பி உள்ளம் குறுகி ஆனந்தம் அடைந்து உடயவரை கட்டித்தழுவி பேரின்பம் அடைந்தார். “எம்பெருமானாரே” என்று கூறி தனது குமாரரான சௌம்ய நாராயணனை
சீடரக்கினார் என்பதும் சரித்திரம்.

எம்பெருமான் சிஷ்யர்கள் கோவிந்தனை புகழ்ந்து பேசினபோது அவர் ஒன்றும் சொல்லாமல் இருந்தார்.இதைக் கண்ட அவர்கள் அவரிடித்தில் புகார் செய்தனர். அவரும் கோவிந்தனை கேட்கும் போது “மறுத்தால் குறை ஒத்துக்கொண்டால் நிறை” அவர்கள் என்னைப்பற்றி பேசியது தங்கள் அனுக்ரஹம் என்பதால் அடியேன் மறுக்கவில்லை என்று கூறினார். அவர்கள் புகழ்ச்சி தங்களையே சேரும் என்றார். இதைக் கேட்டு மிக்க மகிழ்ந்து கோவிந்தனை எம்பெருமானார் என்றே அழைக்க, குருவி தலையில் பனங்காய் வைத்தது போல் இருக்கும் அடியேன் தங்கள் நிழ்லில் இருக்கவே ஆசைப்படுகிறேன் என்றாராம். அதனால் அன்று முதல் எம்பார் என்று அழைக்கப் பட்டார் தன் பெயரை சுருக்கி.

ராமர் தனது நித்ய திருவாரதனை பெருமாளை அன்று விபீஷணனுக்கு கொடுத்தார்.

பங்குனி உத்சவத்தின் ஒன்பதாம் நாள் உடையவரின் சரணாகதி கத்யம் (மஹாலக்ஷ்மியைப்பற்றி) ஸ்ரீரங்க கத்யம் (ரங்கனதனுக்காக) வைகுண்டகத்யம் சாதிப்பது வழக்கம்.

திருப்பேர் நகரான் அப்பக்குடத்தான் பற்றி பாடின பின்பு நம்மாழ்வார் வேறு எந்த திவ்ய தேசத்தை பற்றியும் மங்களா சாசனம் பண்ணவில்லை.

திருகோட்டியூர் திவ்ய தேசத்தில் உத்சவர் வெள்ளியால் காட்சி தருகிறார்.

Courtesy: Nochalur Sri Seshadri Sampath Swami

Print Friendly, PDF & Email

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here