விக்னங்களை விலக்கியருளும் விஷ்வக்ஸேநர் – 3

0
1,114 views

இந்த விஷ்வக்ஸேநர், நித்ய சூரிகள் கோஷ்டியிலும் இடம் வகித்துக்-கொண்டு எம்பெருமானுக்கு பரமபதத்தில் சேவைபுரிந்து கொண்டு இருக்கின்றார். நித்யசூரிகள் வரிசையைக்கூறும் போதும் அநந்த, கருட, விஷ்வக்ஸேநாதிகள் என்று இங்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் இவரை மூன்றாவது இடத்திலேயே வைத்துக் கொண்டாடுவர்.

வைணவக்கோயில்களில், த்வாரபாலகர்கள், கருடன் போன்ற நித்யசூரி-களுக்கு பெருமாள் சடாரி சாதிப்பது வழக்கமில்லை. இருப்பினும் நித்ய-சூரிகள் வரிசையில் இடம் வகிக்கும் இவருக்கு ஸ்ரீசடாரி சாதிப்பதுண்டு. காரணம் இவர் ஆச்சார்யர்கள் கோஷ்டியில் இடம் பிடித்திருப்பதே.

ஈஸ்வர ஸம்ஹிதையில், பெருமாளுக்கு நிவேதனம் செய்த ப்ரசாதத்தை இரண்டு பாகங்களாகச் செய்து, விஷ்வக்ஸேநருக்கு ஆராதனம் முடிந்த- தும் அவருக்கும், அவர் பரிஜனங்களுக்கும் ஒருபாகத்தைக் கண்டருளப் பண்ணுவர். பிரகு அந்த ப்ரசாதத்தை ஒரு ஆழமான கிணற்று நீரில், அல்லது பூமிக்குள் சேர்த்துவிட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

இவை மேலும், பாத்ம ஸம்ஹிதை, லக்ஷ்மிதந்த்ரம் ஆகியவற்றிலும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் விஷ்வக்ஸேநர் ஆச்சார்ய பரம்பரையை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு நிவேதனம் செய்த ப்ரஸாதத்தை நாம் உண்ணலாம் என்பது பெரியவர்கள் கருத்து.

பாதுகையின் பெருமைகளைச் சொல்லப்புகுந்த ஸ்வாமி தேசிகன், தம் பாதுகாஸஹஸ்ரத்தில் மற்றுமொரு ஸ்லோகத்தில்,

யா தே பாஹ்யாங்கணம் அபியத : பாதுகே! ரங்கபர்த்து: |
ஸஞ்சாரேஷு ஸ்புரதி விததி : ஸக்ரநீலப்ரபாயா : ||
விஷ்வக்ஸேந ப்ரப்ருதிபிரஸௌ க்ருஹ்யதே வேத்ரஹஸ்தை : |
ப்ருவிக்ஷேபஸ் தவ திவிஷதாம் நூநம் ஹ்வாநஹேது : ||

“பாதுகையே! சஞ்சாரத்திற்காகப் பெருமாள், தன் சயன அறையைவிட்டு வெளியே வரும்போது உன்மீது பதிக்கப்பட்ட இந்திர நீலக் கற்களிலிருந்து வெளிவரும் ஒரு நீலஒளி, கைப்பிரம்புடன் காணப்படும் விஷ்வக்ஸேநரை ,தேவர்களை அழைக்க அணையிடும்படி உன் புருவநெளிப்பால் கூறுவது போன்று தோன்றுகிறது” என்று கூறுகிறார். ஆக தேவர்கள் அனைவரும் அவர் ஆணைக்குக் கட்டுபட்டவர்கள் என்பது விளங்குகின்றது அல்லவா !

இந்த சேநைநாதன் அவதரித்தது ஒரு ஐப்பசி மாதம், பூராட நக்ஷத்திர-மாகும். இவர், ஜென்மதினத்தில் இவரை இந்த எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின் சேனைத்தலைவரை, நித்ய சூரியை, ஆச்சார்யனை, நீலமேகவண்ணத்துடன், நான்கு கரங்களில் முறையே சக்ரம், சங்கு, கதை, வேத்ரவதியென்ற கைப்பிரம்பினைத் தாங்கிக்கொண்டு, சூத்ரவதி என்ற தம் மனைவியுடன் கூடிய (இவருக்கு யக்ஞோபவீதமும், ஸ்ரீவத்ஸமும் கிடையாது. மற்றபடி மஹாவிஷ்ணு போன்றே தோற்றமளிப்பார் ).

இந்த விஷ்வக்ஸேநரை தினமும் அவர் மூல மந்திரம், காயத்ரி மந்திரம், த்யான ஸ்லோகம் மற்றும் அவருடைய அஷ்டோத்திரத்தைச்சொல்லிவர நம் இடர்கள் அனைத்தும், பகலவனை கண்ட பனிபோல விலகியோடிடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here