Hethirajan Part- 2

0
482
Sudarshana
This article is written by Sri Parthasarathy Swami. Hethirajan – is none other than Chakrathazhwar, Sri Sudarshanar. Part 1 of this article can be read from: http://anudinam.org/2013/07/16/hethirajan-part-1/

இவர் அவதரித்தது ஆனிமாதம் சித்திரை நக்ஷத்திரத்தில்.  அந்த நாளில் அநேகமாக எல்லா எல்லா வைணவத் திருக்கோயில்களிலும் விசேஷ திருமஞ்சனம், பூஜைகள், சுதர்ஸன ஹோமம் ஆகியவை நடைபெறும். இவரது துணைவியாரின் பெயர் “ விஜயவல்லி “ .

 ஸ்ரீமஹாவிஷ்ணுவின் ஆபரணமாகத்திகழ்ந்த ஆவியானுக்கு தனி சக்தியும் கொடுத்து வழிபாடு செய்வதற்குரிய வடிவம் உருவான தகவல் “ லக்ஷ்மி தந்தரம்  “ என்றநாலில் விரிவாகக் காணப்படுகின்றது.  இவர் லக்ஷ்மிதேவி-யின் கிரியா சக்தியாவார்.  சூரியன், சந்திரன், அக்னி போன்றதேவர்களுக்கு இவர் மூலமே மூலசக்தி கிடைக்கின்றது.

“பகம்“ என்றால் ஆறு. ப்ரம்ம ஞானம் என்ற முக்காலத்தையும் அறிவதே, “ஞானம்“ , உலகங்களைப்படைப்பது “சக்தி“, னைத்தவுடன் நினைத்த செயலை புரிவது “ஐஸ்வர்யம்“ ,இந்த உலகத்தைத்தாங்குவது “பலம்“, எல்லா உலகங்களுக்கும் மூலப்பொருளாக இருப்பது “ வீர்யம்  “,  பிறர் உதவியின்றி படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைச் செய்வதே “  தேஜஸ் “,  ஆக இந்த ஆறு குணங்களையும் கொண்ட ஒருவ-னையே பகவான் என்று கூற தகுதிப்படைத்தவன் ஆகிறான்.  இந்த ஆறு சிறந்த குணங்களைக் கொண்டவன் ஸ்ரீமந் நாராயணன் ஒருவனே அன்றி வேறு ஒருவருமில்லை.  ஆனால் இந்த குணங்களையும் கொண்டவராக விளங்குவதாக “ பாஞ்சராத்ர ஆகமத்தில், அஹிர்புத்ய ஸம்ஹிதையில்  “கூறப்பட்டுள்ளது.  திருஷ்டி, பில்லி, சூன்யம், வசியம், உச்சாடனம், அகால மரணம் போன்ற தோஷங்களை நீக்கக்கூடியவர் இந்த ஆழியான்.

ஒருசமயம், ஸ்ரீரங்கம் ஸ்ரீகூரநாராயணஜீயர் ஸ்வாமிகள் “ஸ்ரீசுதர்ஸன சதகம்“  என்ற நூறு பாசுரங்களைக்கூறி திருவரங்க ஆலயத் திருவாய்-மொழி ஓதுவாரின் கொடிய நோயை விரட்டி அடித்தாராம்.  இதுபோன்றே ஒருசமயம், ஸ்வாமி தேசிகன், திருபுட்குழி வாழ் மக்களுக்களை வாட்டிய கொடிய நோயை சுதர்ஸன ஆழ்வார் மீதான “ ஷோடசாயுத ஸ்தோத்தி-ரத்தை  “ஜபித்து விரட்டி அடித்தாராம்.  இவையெல்லாம் உண்மையில் நடந்த நிகழ்ச்சிகளாகும்.  இவர்,இந்த ஹேதி-ராஜன், பதினாறு ஆயுதங்க-ளைத் தம் பதினாறு திருக்-கரங்களில் தாங்கி நம்மையெல்லாம் ரக்ஷித்து வருகிறார்.  அந்த பதினாறு ஆயு-தங்கள் முறையே, சக்ரம், சங்கம்,தனுசு, பரசு, அசி (வாள்), பாணம், சூலம், பாசம், அங்குசம், அக்னி, கட்கம், கேடயம், ஹலம் (கலப்பை), சலம் (உலக்கை), கதை, குந்தம் என்பனவை.

பலத்திருக்கோயில்களில், சக்ரத்தாழ்வாருக்கு தனி சந்நிதி இருந்தாலும், திருமோகூர் என்ற திவ்ய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் சக்ரத்தாழ்வாரே மிக பிரசித்தி.  இவர் எப்போதும் பக்தர்களைக் காப்பாற்ற தயாராக நிற்கும் நிலையிலேயே தம் கால்களை வைத்துக்கொண்டு காட்சியளிக்கின்றார். மேலும், சக்ரத்தாழ்வாரின் திருமேனியைச்சுற்றிலும், மந்திரங்களுக்-கெல்லாம் சிகரமாக விளங்கும் “ காயத்ரி மந்திரத்தின் “ 24 அக்ஷரங்களுக்-கான தேவதைகளும் எழுந்தருளி இருக்கிறார்கள்.

ஒருசமயம், அத்ரி, ப்ருகு, வசிஷ்டர், பார்கவர், புலஸ்தியர், ஆங்கி-ரஸர் முதலான தபஸ்விகள் பிரம்மனிடம், உலகத்தில் நித்யவாஸம் செய்யத் தகுந்த ஒரு சிறந்த புண்யஸ்தலம் எது என்று கேட்டனர்.   அதற்குஅவரும்  “ திருமழிசை ‘ என்ற திவ்ய க்ஷேத்திரத்தைக்-காட்டினாராம். அந்த முனிவர்-களும், இந்த புண்ணிய பூமியில் வந்து வாசம் செய்ய ஆரம்பித்தார்கள்.  அப்போது பார்கவ முனிவருக்கு “ தீர்க்க  த்திரம் “ என்ற யாகத்தின் மூலமாக அவர் மனைவிக்கு ஒரேமாத கர்பத்தில், பிண்டமாக ஒரு குழந்தை பிறந்-தது.  அவர்கள் அந்தக்-குழந்தையை ஒரு புதரில் விட்டுவிட்டுச் சென்று-விட்டனர்.  ஸ்ரீசுதர்ஸன அம்ஸமாகப் பிறந்த அந்தக்குழந்தை, கை,கால்க-ளுடன் உருபெற்று பசி, தாகத்தால் அழுதது.  அங்கு பிரம்பு அறுக்க வந்த திருவாளன் என்பவன் குழந்தையை எடுத்துச்சென்று தன் மனைவி பங்க-யச் செல்வியிடம் கொடுத்து வளர்க்கச்சொன்னான்.  ஆனால் குழந்தை எது வும் அருந்தாமல், சிறுநீர் கழிக்காமல் இருந்தது கண்டு ஊர்மக்கள் வியந்த-னர்.  பிறகு ஒரு-முதியவர், தம் மனைவியுடன் வந்து பருக பால் தர,குழந்தையும் அருந்தி-யது.  இது தினமும் தொடர்ந்தது.  ஒருசமயம், அந்தக் குழந்தை தான் அருந்தி மிஞ்சிய பாலை அவர்கள் பருகத் தர, அதை பருகிய அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.  அதற்கு கணி-கண்ணன் என்று பெயர் வைத்தனர்.  அவனே சுதர்ஸன அம்ஸத்துடன் பிறந்த திருமழிசை பிரானு-க்கு சீடனாக ஆனான்.  ஒருசமயம், அந்த ஊர் மன்னன் கணிகண்ணன் தம்மைப்புகழந்து பாட மறுத்தபோது அவரை நாடு கடத்தினான்.  கணிகண்ணன் அந்த ஊரை விட்டு வெளியேற அவரைத்-தொடர்ந்து, ஆழ்வாரும்,  திருவெஃகா எண்பெருமானிடம், “ நீரும் உம் பைநாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு வாரும்  “ என்று பாட, பெருமாளும் அவர் சொன்ன படியே அவரை பின் தொடர, ஊரே சுபிக்ஷத்தை இழந்தது. அவர்-கள் சிறப்பை உணரந்த ணன்னனும் அவர்களிடம் மன்னிப்பு கேட்க அவர்களும் ஊர் திரும்பினர் என்று வரலாறு கூறுகின்றது.  அந்த பெருமா-ளும் “ சொன்னவண்ணம் செய்த பெருமாள் “  என்று பெயர் பெற்றார்.

இத்தகய சக்திகள் வாய்ந்த அந்த ஹேதிராஜனை, நேமியை அனுதினமும் ,“ஓம் சுதர்ஸனாய வித்மஹே, ஜ்வாலாசக்ர தீமஹி தன்னோச் சக்ர ப்ரசோதயாத்“  என்ற அவர் காயத்ரி மந்த்ரத்தை உச்சரித்து அவர் அருளை பெறவோமாக.

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here