Thirukkannamangai Sri Bakthavatsala Perumal Chitrai Brahmotsavam- Day 4

1
326
Twitter
WhatsApp

On 9 May 2014, Jaya varusha Chithirai Pooram; is the day 4 0f Sri Bakthavatsala Perumal Chitrai Brahmotsavam at Thirukannamangai. In the morning Sri Bhakthavatsala perumal with andal thiruveedhi purappadu in Pallaku to the Nearby and had Visheshal Thirumanjanam. Later in the evening Perumal Thiruveedhi purappadu took place in Garuda Vahanam. Lot of Bhaagavathas from nearby villages had darshan on Garuda Sevai.

பேய்முலைத்தலை நஞ்சுண்ட பிள்ளையைத்*

தெள்ளியார் வணங்கப்படும் தேவனை*

மாயனை மதிள் கோவலிடைகழி மைந்தனை*

அன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை*

இலங்கும் சுடர்ச் சோதியை*

எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை*

காசினை மணியைச் சென்று நாடி*

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே*

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரமான திருக்கண்ணமங்கையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு நடந்து வரும் சித்திரை ப்ரும்மோத்ஸவத்தில், இன்று ஸ்ரீ ஜய வருஷம் சித்திரை மாதம் 26 ந் தேதி 09.05.2014 விள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் விஸ்வரூபம், திருவனந்தல், காலசந்தி பூஜைகள் முடிந்து, வீதியில் “ செல்வர் “ ஏளி பலி சாதித்து அதன் பின் “ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருப்பல்லக்கில் வீதியுலா வந்து உள்ளே எழுந்தருளியதும் விசேஷ திருமஞ்சனம் கண்டருளினார்.

மாலை நித்தியானுசந்தான கோஷ்டி, பலி சாதித்தல் முடிந்து​ ,இரவு 8 மணிக்கு விசேஷ புஷ்ப அலங்காரத்தில் “ தங்க கருட “ வாகனத்தில் திரு வீதியில் சேவை சாதித்தருளினார். உள்ளே ஏளியதும் “ திருக்கண்ணாடி அறை” யில் ஸ்ரீ உபய நாச்சியார்கள், ஸ்ரீ ஆண்டாளுடன் சேவை சாதித்து, சாற்றுமறை தீர்த்த கோஷ்டி நடந்து இன்றைய உத்ஸவம் பூர்த்தியானது. ஏராளமான பக்தர்கள் சேவித்து இன்புற்றனர்.

These are some of the photos taken during the occasion…

 

 

Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here