Kozhiyalam Swami Thirunakshatra Mahotsavam

0
268
Twitter
WhatsApp

On,22 March 2014, Panguni Anusham; Kozhiyalam Swami Thirunakshatra Mahotsavam was be celebrated in very grand manner at Sri Uttamur Swami Siddhashramam, T.Nagar, Chennai. On behalf of the Thirunakshatra mahotsavam, Upanyasam was delivered and Veda Prabandha Grantha Parayanam with satrumurai happens at grand manner at Siddhashramam, T Nagar, Chennai. Lot of astikas took part in Kozhiyalam Swami Thirunakshatra Mahotsavam

ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி

ரங்கராமாநுஜ மஹாதேசிகன்

(கோழியாலம் ஸ்வாமி)

 

ஸ்ரீமதுராந்தகத்திற்கு அருகில் கோழியாலம் என்ற அக்ரஹாரத்தில் விஷூ ௵ பங்குனி௴

அநுஷநக்ஷத்ரத்தில் அவதாரம். பூர்வாச்ரமத்தில் “ராகவாசாரியார்” என்று திருநாமம்.

வங்கீபுரத்து ஆச்சி,வங்கீபுரத்து நம்பி வம்சம். திருத்தகப்பனார் திருநாமம்

ஸ்ரீ வேங்கடவரதாசார்யர். உரிய காலத்தில்தகப்பனாரிடம் காயத்ரீக்ரஹணமும்,

பஞ்ச ஸம்ஸ்காரமும். ஸ்ரீகாஞ்சியில் இளங்காடு ரங்காசாரியரிடம்தர்க்கமும்,

பெருங் கட்டூர் கண்டாவதாராசாரியரிடம் வியாகரணமும் க்ரஹித்தருளியாயிற்று.

லோகப்ரஸித்தராய் எழுந்தருளியிருந்த திருப்பதி ஸ்வாமி என்கிற

ஸ்ரீவேதாந்த ராமாநுஜ மஹாதேசிகனிடம்உபய வேதாந்தமும் பூர்ணமாய் க்ரஹித்தாயிற்று.

திருவேங்கட முடையான் திருவடிவாரத்தில் அந்தஸ்வாமியால் பரன்யாஸம் செய்தருளப்

பெற்று பூர்வாச்ரமத்திலேயே வேதாந்த ப்ரவசநம் செய்துகொண்டு 37வது

திருநக்ஷத்திரத்திலேயே ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி பௌண்டரீகபுரம்

ஸ்வாமிஸந்நிதி யில் ஸன்னியாஸாச்ரமம் ஸ்வீகரித்து 45 சாதுர்மாஸ்யங்கள்

எழுந்தருளியிருந்தபடி. வேதாந்தசாஸ்த்ரத்தில் உயர்ந்த கிரந்தங்கள் ஐந்தும்,

ஆசார சிக்ஷைக்காக க்ரந்தங்க ளும், ஆங்காங்குயாத்ரையின்போது மங்களாசாஸன

ச்லோகங்களும் பலவும் ஸ்வாமி அருளிச் செய்தபடி. ஸ்ரீஸ்வாமிதிருவடியில் ஆச்ரயித்த

திக்கஜங்களான வித்வான்கள் பலர். “பரபகு நிராக்ருதி:”, “பேதசாம்ராஜ்யம்”

“உபயுக்த ஸங்க்ரஹம்”,உக்தி நிஷ்டா பரித்ரணம்”,அநந்த மயாதிகரணாபார்த்த பங்கம்”,

பாடசோதனம்”முதலிய ஸ்ரீஸ்வாமியின் ப்ரபலமான க்ரந்தங்கள் அச்சாகியுள்ளன.

பையம்பாடி சேட்டலூர்ஸ்ரீவத்ஸாங்காசாரியார், கூத்தப்பாக்கம் வீரராகவாசாரியார்,

கூத்தம்பாக்கம் நீல மேகாசாரியார்,கோ.சடகோபாசாரியார் முதலியவர்களும், அடியேனும்

பூர்வாச்ரமத் திலேயே இந்த ஸ்வாமியினிடம்ஆச்ரயித்தவர்கள். ஸ்ரீமதுபயவே அபினவ

பட்டபாண ராயம்பேட்டை கிருஷ்ணமாசாரிய ஸ்வாமியும் சிலகிரந்தங்களை இந்த

ஸ்வாமியினிடம் அதிகரித்துள்ளார். ஸ்ரீ உ.வே. கூத்தாண்டகுப்பம் ரங்கராமாநுஜசக்ரவர்த்தி,

ஸ்ரீ உ.வே. கோழியாலம் ரங்கநாதாசாரிய ஸ்வாமி முதலானோரும் இவ்விடத்தில்

ஸகலான்வயங்களும் பெற்று விளங்கி வருபவர்கள். இந்த ஸ்வாமியின் ஆத்மகுணங்களும்,

விரக்தியும்,சிஷ்யசிக்ஷண பரிபாடியும், கிரந்த காலக்ஷேப ஸமயங்களில் சோதன சக்தியும்,

வ்யாக்யானப்ரகாரங்களும் நேரில் அனுபவித்தவர்களுக்கே விளங்கும். ஒரு ஸமயம்

ஸ்ரீமதுபயவே கபிஸ்தலம்தேசிகாசாரிய ஸ்வாமி தாமருளிச் செய்து பாதி அச்சிட்டு

வருகிறதான வ்யாஸ ஸித்தாந்தமார்த்தாண்டத்தை ப்ரஸங்காத் ஸ்ரீஸ்வாமியிடம்

விண்ணப்பித்து இதிலுள்ள சைலியைக் கடாக்ஷித்துதிருவுள்ளத்தில் பட்டதை ஸாதித்தருள

வேண்டும் என்று விண்ணப்பிக்க ஸ்ரீஸ்வாமி யும் அதில் சிலபரிஷ்காரங்களும் அருளிச்செய்ய, அதைக்கண்ட அந்த ஸ்வாமி

அச்சாக வேண்டிய மீதி புஸ்தகத்தின்மாத்ருகையையும் ஸ்வாமி ஸந்நிதியில்

ஸமர்ப் பித்து பரிஷ்கரித்து,அச்சிட்டவற்றிலும் பரிசிஷ்டமாகசில பரிஷ்காரங்களை

ஸஹ்ருத யராய் திருவுள்ளம் பற்றியாயிற்று.அண்ணாமலை விச்வ வித்யாலயத்தில்

முதல் முதலாக அச்சிடப்பட்ட “நியாய குலி சத்தை” ஸ்ரீ ஸ்வாமிசோதித்துக்

கொடுத்ததிலிருந்தும் ,ஸித்தித்ரயத்தை” அடியேன் ஒரு சிறு உரையுடன் அச்சிட்டபோது

சோதித்ததிலிமிருந்து ஸ்ரீஸ்வாமியின் க்ரந்த சோதன சக்தியை இவ்வளவு என்று அளவிட

முடியாது.அடியேன் நேரில் அனுபவித்தேன்.உடையவர், தேசிகன் நாளைய

சூழ்நிலையிலேயே ஸ்ரீ ஸ்வாமிஎழுந்தருளி யிருக்கும்படி யாயிருந்தது.

ஒரு ஸமயம் ஏதோ ஒரு ஸமாசாரத்தை போனில் தெரிவித்துவிட்டு வந்தோம்.

போன் என்றால் என்ன? என்று கேட்க அதை விண்ணப்பித்தோம். “இது என்ன ஆச்சரியம்!இங்கு பேசியது அப்படியே அங்கு கேட்குமா?” என்று சிறு குழந்தையைப் போல் அருளியாயிற்று.

ஸ்ரீமத்ஸ்வாமியின் விரக்தியைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

“இது என்ன கோழியாலம் ஸ்வாமிஸந்நிதியா என்ன?” என்று விரக்திக்கு இன்றளவும்

ஒரு பழமொழி போல் வழங்கி வருவதே இதற்கு சான்று.

உத்தமூர் தி. வீரராகவாச்சாரியர் ஸ்வாமி.

These are the some of the photos taken during the Occasion…

Courtesy : Pradip VS

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here