On , 23 November, 2014 ; Jaya Varusha Karthikai Anusham, Thirunakshatra Mahothsavam of ‘Koti Kannikadhaana’ Sri Lakshmi Kumara ThathaDesikan was celebrated grandly at Kanchipuram. In the morning Special (visesha) thirumanjanam took place for Sri Lakshmi Kumara Thatha Desikan vigraham at Kanchipuram Sri Varadaraja Perumal Temple.Later Sri Devaperumal comes out of thirumalai and Ubhaya Nachiyars, then Sri Perundevi Thayar joins the purappadu and Ezhundarulal at Sri Laksmi Kumara Thatha Desikan Sannadhi. Sri Devaperumal gave Scintillating Darshan in Vajrangi Sevai with Sri Perundevi Thayar during purappadu.Lot of astikas took part in the Thatha Desikan Satrumurai and had the blessings of Acharya and Perumal.
The following are some of the photos taken during the occasion…
Photography : Sri Elangadu Ranganathan Chakravarthy
dasan thanks.
ஸ்ரீமத்வேதாந்ததேசிகஸம்ப்ரதாயதுரந்தர ஏடூர் இம்மிடி திருமலை லக்ஷமீகுமார,குமாரதாததேசிகன் சாத்துமறை தினம், பேரருளாளன் ரத்னாங்கியுடன் ஸேவை.வேத, மந்த்ரபுஷ்பகோஷ்டீ.
ஸ்ரீதாததேசிகனின் விம்சதியில்-
தாதார்யேண விநிர்மிதைஃ நவநவைரத்யத்புதைருத்ஸவைஃ
உத்பூதாத்புதஹர்ஷவாரிபரிதோ தேவ்யா ஸஹ ஸ்ரீபதிஃ
ஆஸ்தே வாரணபூதரே ப்ரவிலஸத் திவ்யாலயாலங்க்ருதே
நித்யம் விஸ்ம்ருத திவ்யலோகவஸதிஃ தம் தாதயார்யம் பஜே.
ஸ்ரீகுமாரதாததேசிகன் ஏற்படுத்திய புதிய புதிய உத்ஸவங்களால் மிகவும் ஸந்தோஷத்துடன் பெரியபிராட்டியுடன் வரதன், அநேகமண்டபாதிகள் நிறைந்த ஸ்ரீஹஸ்திகிரியில் , நித்யவிபூதியான ஸ்ரீவைகுண்டத்தையும் மறந்து எழுந்தருளி உள்ளார். அப்படிப்பட்ட தாததேசிகனை நமஸ்கரிக்கிறேன் என்பதாக பொருள்.
ஸ்வாமி தேசிகன், வைகுண்டவாஸேபி ந மேபிலாஷஃ வரதனின் ஸேவையை விட்டு ஸ்ரீவைகுண்டத்திலும் ஆசை இல்லை என்றார். இங்கு ஸ்ரீதேவாதிராஜன் , இம்மாதிரி உத்ஸவத்தால் ஸ்ரீவைகுண்டத்தையே மறந்தார் என்பதாக அனுபவம்.
ஸ்ரீலக்ஷ்மீகுமாரதாததேசிகன், அநேகவாஹநங்கள்,மண்டபங்கள், மற்றும் திருவாபரணங்களை ஸ்ரீபேரருளாளனுக்கு ஸமர்ப்பித்ததாக ச்லோகங்கள் உள்ளன. ஸமீபகாலத்தில் தத்வம்ச்யரனான ஸ்ரீமான் வெ, லக்ஷ்மீகுமாரதாதாசார்யர் ஸமர்பித்த உயர்ந்த ரத்னாங்கி, மற்றும் ரத்னகிரீடத்துடன் திவ்யதம்பதிகளின் அத்யுன்னதமான ஸேவை.